தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Leave : மாணவர்கள் கவனத்திற்கு.. இந்த மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

School Leave : மாணவர்கள் கவனத்திற்கு.. இந்த மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

Divya Sekar HT Tamil
Jul 04, 2023 10:26 AM IST

சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் நாகப்பட்டினத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகப்பட்டினத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ட்ரெண்டிங் செய்திகள்

சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த கோயில் ஆகும். திருவாரூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், நாகபட்டிணத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சிக்கல் நவனீதஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

இந்த கோயில் ஆச்சர்யமான அமைப்பாக முருக பெருமான் ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணு பெருமான் இருவரும் இங்கே அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும். சமயக் குரவர்களால் பாடல்பெற்ற பழைமைவாய்ந்த இக்கோயிலில் சிங்காரவேலவர் வீற்றிருக்கும் சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தலத்தில் எழுந்தருளும் சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கன்னியிடம் வேல் வாங்கிக்கொண்டு திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் கும்பாபிஷேகம் நாளை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடை பெற்றது வருகிறது. விழாவில் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து நாகப்பட்டினம் மாவட்டபோலீஸ் சூப்பிரண்ட்ஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார்.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் நாளை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படயுள்ளனர்.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூலை 8ஆம் தேதி பள்ளி இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்