Tamil Top 10 News: ’சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் சரமாரி கேள்வி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: ’சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் சரமாரி கேள்வி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Tamil Top 10 News: ’சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் சரமாரி கேள்வி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Aug 12, 2024 10:17 PM IST

Tamil Top 10 News: சவுக்கு சங்கருக்கு ஜாமீன், செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு, பங்குச்சந்தையில் சரிந்த அதானி குழும பங்குகள் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

Tamil Top 10 News: ’சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் சரமாரி கேள்வி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
Tamil Top 10 News: ’சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் சரமாரி கேள்வி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

சரிந்த அதானி குழும பங்குகள் 

ஹிண்டன்பர்க் சர்ச்சை எதிரொலியாக அதானி குழுமத்தில் உள்ள 2 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்றவை சரிவு உடன் நிறைவு பெற்று உள்ளன. அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆன அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகள் தொடக்கத்தில் மும்பை வர்த்தகத்தில் 5.5 சதவீதம் வரை சரிந்தன. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் 17 சதவீதம் சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அம்புஜா சிமென்ட் லிமிடெட் ஆகிய பங்குகள் மட்டுமே இன்றைய தினம் முன்னேற்றத்தில் முடிவு அடைந்தது. அதானி பங்குகள் சந்தை மூலதனத்தில் ரூ.22,064 கோடியை இழந்துள்ளன.

பாஜக விமர்சனம் 

ஹிண்டன்பர்க் அறிக்கை இந்திய பங்குச்சந்தைகளை சீர்குலைக்கும் முயற்சி என பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார். மேலும் ? நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை குலைத்து, நாட்டின் ஜனநாயக நடைமுறையில் தலையிடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய சதி?, அரசாங்கத்தில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இது போன்ற விடயங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பது அனைவரினதும் பொறுப்பாகும் என பாஜக கூறி உள்ளது. 

கேரள வங்கி முடிவு

வயநாட்டில் ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக மாநிலத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைப்பான கேரள வங்கி அறிவித்து உள்ளது.  கேரள வங்கி ஏற்கனவே முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளது. இது தவிர, வங்கி ஊழியர்கள் தானாக முன்வந்து தங்களது ஐந்து நாள் சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்து உள்ளனர். 

அண்ணா பல்கலைகழகம் முதலிடம்

தேசிய அளவில் சிறந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இதில் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்று உள்ளது. மாநில பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடத்தை பெற்று உள்ளது. 

மேலும் படிக்க

மனு தள்ளுபடி 

சென்னையில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் இழப்பீடு கேட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது. 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது. 

நடிகர் ரஞ்சித் மீது விசிக புகார்

சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடிகர் ரஞ்சித் பேசி வருவதாக விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு காவல்துறையில் புகார் மனு அளித்து உள்ளார்.

வேளாண் பல்கலைக்கழகம் 

காரைக்காலில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்து உள்ளது.  

சவுக்கு சங்கர் வழக்கில் ஜாமீன் 

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உதகை நீதிமன்றம் உத்தரவு. 

போதை பொருட்கள் எரிப்பு 

போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தையொட்டி பல்வேறு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரிப்பு. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.