TOP 10 NEWS: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Aug 30, 2024 09:19 PM IST

Tamil Top 10 News: பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக அரசுக்கு அழுத்தம், தீக்குளித்த திமுக நிர்வாகி உயிரிழப்பு, திமுக ஈபிஎஸ் கண்டனம், திருச்சி என்.ஐ.டியில் மாணவிகள் போராட்டம் உள்ளிட்ட செய்திகள் உடன்

TOP 10 NEWS: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

1.பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர கடிதம்

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்து இட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். 

2.தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம் 

மதுரையில் திமுக எம்.எல்.ஏவான கோ.தளபதியின் வீட்டின் முன்னர் தீக்குளித்த அக்கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி மாணகிரி கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்சியில் தான் நடத்தப்படும் நிலை குறித்து ஏற்கெனவே கட்சித் தலைமைக்கு கணேசன் கடிதம் எழுதி இருந்தார். 

3.தமிழ் சினிமா மீது நடிகை விஜித்ரா புகார்

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் தனக்கு ஆதரவாக பேசவில்லை என நடிகை விஜித்ரா குற்றம் சாட்டி உள்ளார். ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையானது மலையாள திரையுலகில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து பதவி விலகி வருவது குறிப்பிடத்தக்கது. 

4.திருச்சி என்.ஐ.டியில் பாலியல் அத்துமீறல் 

திருச்சி என்.ஐ.டி விடுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாது என நிர்வாகம் உறுதி அளித்து உள்ளது. 

5.திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி உள்ளார். திருச்சி என்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் படித்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், விடியா திமுக அரசில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை நான் சுட்டிக்காட்டி வந்தும், இந்த விடியா அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க திராணியின்றி செயலற்று இருப்பதன் விளைவே இதுபோன்ற சம்பவங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தண்டிக்கும் நிர்பயா சட்டத்தை, தமிழ்நாட்டில் ஒரு நிர்பயா சம்பவம் நடந்தால் தான் கையில் எடுப்பதாக இந்த விடியா திமுக அரசு எண்ணத்தில் இருக்கிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார். 

6.ஆளுநர் அனுமதிதரவில்லை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நடத்த ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். 

7.தமிழக பாஜகவை வழிநடத்த புதிய குழு

உயர்படிப்புக்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்று உள்ள நிலையில் கட்சியை வழிநடத்த ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு. 

8.உருவாகும் புதிய காற்றழுத்த பகுதி

வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதால் தமிழ்நாட்டில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல். 

9.டி.என்.பி.எஸ்.சி தொழில்நுட்பத் தேர்வு

டி.என்.பி.எஸ்.சியில் தொழில் நுட்ப பணியிடங்களுக்கான தேர்வு வரும் நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறும் என்றும் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு. 

10.கள்ளக்குறிச்சி வழக்கு 

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.