COTTON MILK: மதுரை ஸ்டைலில் சூடான சுவையான பருத்திப்பால் ரெடி செய்வது எப்படி? - இதுல இவ்வளவு ஹெல்த்தி இருக்கா!
COTTON MILK: மதுரை ஸ்டைலில் சூடான சுவையான பருத்திப்பால் ரெடி செய்வது எப்படி? - இதுல இவ்வளவு ஹெல்த்தி இருக்கா எனப் பலர் கூறுகின்றனர். பருத்திப்பால் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.
COTTON MILK: ஒவ்வொருவரும் உண்ணும் உணவிலும் குடிக்கும் பானத்திலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நம் உடம்பு என்னும் தொழிற்சாலை தொய்வு இல்லாமல் இயங்க, நாம் உண்ணும் உணவும் அது செயல்பட இன்றியமையாத காரணமாக இருக்கிறது. அப்படி ஒரு பாரம்பரியமிக்க உணவுதான், பருத்திப்பால்.
இந்த நார்ச்சத்து நிறைந்த பருத்திப் பால் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும். வெறும் வயிற்றில் பருத்திப் பால் குடித்தால், வயிற்றுப்புண் ஆறும் என்று சொல்லப்படுகிறது. இந்த பருத்திப்பால் மதுரை மாநகரில் பல்வேறு வீதிகளில் எளிதாக கிடைக்கும் ஒரு பாரம்பரிய உணவாகும். எனவே, இந்த பருத்திப்பாலை மதுரை ஸ்டைலில் தயாரிப்பது எப்படி என்பது குறித்துப்பார்ப்போம்.
மதுரை ஸ்டைல் பருத்திப்பால் செய்யத் தேவையான பொருட்கள்:
- 100 கிராம் பருத்தி விதை (8 மணி நேரம் நன்கு ஊறவைக்கவேண்டும்)
- ஒரு உருண்டை மண்டை வெல்லத்தில் முக்கால் பங்கு
- சுக்கு - ஒரு துண்டு;
- ஏலக்காய் - 5
- பச்சரிசி - நான்கு ஸ்பூன்
- தேங்காய்த்துருவல் - ஒரு கைப்பிடி அளவு
- நீர்
மதுரை ஸ்டைல் பருத்திப்பால் செய்முறை:
பருத்தி விதையை ஒரு டம்ளர் நீர் ஊற்றி நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளலாம். அதை வடிகட்டிவிட்டு, அதை இரண்டு தடவை நீர் ஊற்றி அடித்து, பால் எடுத்துக்கொள்ளலாம். அதை வடிகட்டிப்போட்டு வடித்து சக்கையை தனியாக எடுத்து வைத்துவிடலாம். அது ஒரு அரை லிட்டர் அளவில் கிடைத்து இருக்கும். பின், அதனை காய்ச்சிக்கொள்ளலாம். இதனை சில்வர் பாத்திரத்தில் வைத்து காய்ச்சாமல், அலுமினியம் அல்லது பிற பாத்திரத்தில் வைத்து காய்ச்ச வேண்டும். ஏனென்றால், சில்வர் உபயோகித்தால் அடிப்பகுதியில் அடிப்பிடிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் மிக்ஸி ஜாரில் ஏலக்காயையும் சுக்கினையும் போட்டு அரைத்து பொடிசெய்து வைத்துக்கொள்ளவேண்டும். பால் நன்கு பொங்கி வரும்போது, ஸ்டவ்வில் தீயின் அளவை சிறிதாக்கி, பாலை கிளறிக்கொண்டே இருக்கலாம். ஊறவைத்த பச்சரிசியை நன்கு பொடியாக்கிக் கொள்ளலாம். அதன்பின், அந்தப்பொடியில் ஒரு டம்ளர் நீர் கலந்து திரவப்பொருளாக்கி, கொதித்துக்கொண்டு இருக்கும் பருத்திப்பாலில் கலந்துவிடலாம். அப்போது பருத்திப்பாலில் எடுத்து வைத்த வெல்லத்தை தூளாக்கி அதில் கலந்துவிடலாம். இதில் வெல்லம் தான் போடவேண்டும் என்ற அவசியம் கிடையாது. பனக்கற்கண்டினை கூட பயன்படுத்தலாம். கொதித்த பாலில் அரைத்து வைத்த சுக்கினையும் ஏலக்காயையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனை நன்கு கிளறிவிட்டுவிட்டு, அரைத்து வைத்திருந்த தேங்காய்ப்பூவையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய்ப்பூ சேர்க்க விருப்பமில்லாதவர்கள் தேங்காய்ப்பால் சேர்த்துக்கொள்ளுங்கள். தேங்காய்போட்ட பிறகு, அடுப்பில் இந்தப் பாலை வைக்காமல், அடுப்புத்தீயை அணைத்துவிட்டு, கீழே இறக்கிவைத்துவிட்டு, பரிமாறவும்.
பருத்திப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
பருத்திப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் மைதிலி பல்வேறு தகவல்களை, அவரது யூட்யூபில் கூறியிருக்கிறார். அவையாவன:-
- பருத்திப்பால் குடிப்பது உயர் ரத்த அழுத்தம் உண்டாவதைக் குறைத்துவிடும்.
- அதேபோல் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவை சீராக வைத்து இருக்க பருத்திப்பால் உதவும்.
- பருத்திப்பால் வைட்டமின் ஈ இருக்கும். இது நரம்புகளுக்கு வலுகொடுக்கும். நரம்புத்தளர்ச்சியைக் குறைக்கும்.
- நினைவுத்திறனை அதிகப்படுத்தும்.
- வளரும் குழந்தைகளுக்கு இந்த பருத்திப்பால் குடிக்கக் கொடுத்தால் புரத ஊட்டச்சத்து அதிகம் கிடைக்கும்.
- தசை வளர்ச்சி மற்றும் திசு வளர்ச்சிக்கு உதவும்.
- பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால்சுரப்பை, பருத்திப்பால் தூண்டும்.
டாபிக்ஸ்