TOP 10 NEWS: ’பரமக்குடியில் போலீஸ் தடியடி முதல் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் காவல் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் தடியடி, சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு போலீஸ் காவல், கூட்டணி குறித்து திருமாவளவன் பேச்சு, பாஜகவின் நடவடிக்கைக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு, நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.பூமிபூஜையில் கலந்து கொள்ள அனுமதி
கிருஷ்ணகிரி அருகே சாலை பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமிக்கு அனுமதி. முன்னதாக கே.பி.முனுசாமிக்கு அனுமதி மறுத்த நிலையில் அதிமுகவினர் உடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
2.நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலை தடுப்பில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து.
3.பாடகர் மனோவின் மகன் மீது வழக்கு
சென்னை வளசரவாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை தாக்கிய புகாரில் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மனோ மீது போலீஸ் வழக்குப்பதிவு. 16 வயது சிறுவன் மற்றும் 20 வயது இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
4.மகாவிஷ்ணுவுக்கு போலீஸ் காவல்
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.
5.பரமக்குடியில் தடியடி
பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தினர் இடையே மோதல். ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்ட நிலையில் தடியடி நடத்தி கூட்டத்தை காவல்துறையினர் கலைத்தனர்.
6.விசிக குறித்து எல்.முருகன் விமர்சனம்
திமுகவினர் மிரட்டும் யுக்தியாக மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை திருமாவளவன் அழைத்து இருக்கலாம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்.
7.ஆதாயம் தேடும் கட்சி விசிக அல்ல! திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் கணக்கு போட்டு ஆதாயம் தேடும் கட்சி அல்ல; தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி குறித்து சிந்திப்பேன் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி. மதுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கருத்து.
9.பாஜக மீது அன்புமணி விமர்சனம்
புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், நிதி தர முடியாது என மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. பாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை ஒருபோதும் பாமக விட்டுக் கொடுக்காது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
10.பத்திரப்பதிவு துறைக்கு ராமதாஸ் கண்டனம்
சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது.பத்திரப்பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது. வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையும் பத்திரப்பதிவு செய்யலாம் என்பதற்காக பத்திரப்பதிவுத் துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை. சர்ச்சைக்குரிய சொத்துகள் மீது நீதிமன்றங்கள் எந்த ஆணையையும் பிறப்பிக்காத நிலையில், அதன் விற்பனையை தடுக்கக் கூடாது என்று சில வழக்குகளில் நீதிமன்றங்கள் வழிகாட்டியிருப்பதாகவும், வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளை பத்திரப்பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அதைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ளது. இது அபத்தமானதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.
டாபிக்ஸ்