L Murugan: “உதயநிதி துணை முதல்வரானால் இதுதான் நடக்கும்”.. எல்.முருகன் அதிரடி பதில்!
- தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கருணாநிதி நாணய வெளியீட்டு விழா ஒரு அரசு விழா. இது எந்தவித அரசியலுக்கும் அப்பாற்பட்டது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்துவது குறித்து நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் தமிழ்நாட்டின் துணை முதல்வராக வருவதால் தமிழ்நாட்டில் ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது. தமிழ்நாட்டின் அமைச்சர்கள், திமுக என்னென்ன செய்து வருகிறார்களோ, அதை அவர்கள் இன்னும் அதிகமாக செய்வார்கள். அதாவது தமிழ் மக்களுக்கு என்னென்ன தீங்குகள் செய்து வருகிறார்களோ அது இன்னும் அதிகமாகும்” இவ்வாறு அவர் கூறினார்.