TOP 10 NEWS: சென்னையில் கார் ரேஸ்க்கு பச்சை கொடி காட்டிய நீதிமன்றம்! மீண்டும் முதலிடம் பிடித்த அதானி!-todays evening top 10 news including chennai car race question paper leak vetti for pongal festival saree allocation adani - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: சென்னையில் கார் ரேஸ்க்கு பச்சை கொடி காட்டிய நீதிமன்றம்! மீண்டும் முதலிடம் பிடித்த அதானி!

TOP 10 NEWS: சென்னையில் கார் ரேஸ்க்கு பச்சை கொடி காட்டிய நீதிமன்றம்! மீண்டும் முதலிடம் பிடித்த அதானி!

Kathiravan V HT Tamil
Aug 29, 2024 10:33 PM IST

Tamil Top 10 News: சென்னை கார் ரேஸ், பிஎட் வினாத்தாள் கசிவு, பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை ஒதுக்கீடு, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த அதானி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு!

TOP 10 NEWS: சென்னையில் கார் ரேஸ்க்கு பச்சை கொடி காட்டிய நீதிமன்றம்! மீண்டும் முதலிடம் பிடித்த அதானி!
TOP 10 NEWS: சென்னையில் கார் ரேஸ்க்கு பச்சை கொடி காட்டிய நீதிமன்றம்! மீண்டும் முதலிடம் பிடித்த அதானி!

1.கார் ரேஸ்க்கு அனுமதி

வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆகிய  தேதிகளில் சென்னையில் கார் ரேஸ் நடத்த தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கார் ரேஸ் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. கார் ரேஸ் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தொடர்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்து உள்ளது. 

2.நடிகை ஷகிலா புகார்

மலையால திரை உலகை போலவே தமிழ் திரை உலகில் உள்ள நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு உள்ளதாக நடிகை ஷகிலா குற்றம்சாட்டி உள்ளார். கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகை ஷகிலா இவ்வாறு கூறி உள்ளார். 

3.அமைச்சர் பேட்டி

தமிழ்த் திரை உலகில் இதுவரை பாலியல் புகார் வரவில்லை என செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் கூறி உள்ளார். 

4.வினாத்தாள் கசிவு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பி.எட். கல்லூரிகளில் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளனர். 

5.பொங்கல் வேட்டி,சேலைக்கு நிதி ஒதுக்கீடு

வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. 

6.வேளங்கண்ணியில் திருவிழா

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோயிலில் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதாவின் தேர் பவனி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, வங்காளம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெறுகின்றது. 

7.வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 

8.எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

அரசு மருத்துவமனைகளி நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகளை உடனடியாக வழங்கவும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வலியுறுத்துவதாக கூறி உள்ளார். 

9.காங்கிரஸ் கட்சி கவலை

நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போலியோ நோய் ஏற்படுவது கவலை அளிப்பதாக காங்கிரஸ் கட்சி கருத்து. 

10.மீண்டும் அதானி முதலிடம்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளார். 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.