Singappenne: உடைந்த பொங்கல் பானை.. சுயம்புலிங்கத்துக்கு சவால்விட்ட மகேஷ்.. சிங்கப்பெண்ணேவில் நடப்பது என்ன?
Singappenne: உடைந்த பொங்கல் பானை.. சுயம்புலிங்கத்துக்கு சவால்விட்ட மகேஷ்.. சிங்கப்பெண்ணேவில் நடப்பது என்ன?
Singappenne: சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும், ’சிங்கப்பெண்ணே’ சீரியலில் இன்றைய (ஆகஸ்ட் 17) எபிசோட்டிற்கான புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இன்றைய எபிசோடு:
சிங்கப்பெண்ணே சீரியலில் சென்னையில் இருந்து செவரக்கோட்டைக்கு வந்த அனைவரும் ஒன்றுசேர்ந்து அம்மனுக்கு மண் பானையில் பொங்கல் வைக்கின்றனர். அப்போது அந்தக் குழுவில் இருந்த பெண், பொங்கலைக் கிளற முயன்றபோது, அந்த மண்பானை கீழே விழுந்து உடைந்துவிடுகின்றது. உடனே அனைவரும் கலங்குகின்றனர். அப்போது பானையை உடைத்தது யார் என்று, சிறுமி ஒருத்திக் கேட்க, தன்னை யாரோ தள்ளிவிட்டார்கள் என சொல்கிறார், அந்த பொங்கல் பானையை கிளறிய இளம்பெண். இதனால், அன்பு, ஆனந்தி, மகேஷ் ஆகிய அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.
அப்போது அவ்விடத்திற்கு வரும் வில்லன் சுயம்புலிங்கம், வந்திருக்கும் டவுன்காரங்க யாராவது தப்புத்தண்டா செய்திருக்கணும். இல்லை, இந்தக் குடும்பத்தில் யாராவது சுத்தபத்தமில்லாமல் இருக்கணும் எனச் சொல்கிறார், சுயம்புலிங்கம்.
இதனிடையே நடக்கும் கிராமத்து திருவிழா போட்டியில், சுயம்புலிங்கம், வேறுயாரையாவது வந்து போட்டிபோடச் சொல்லு என்கிறார். உடனே மோதிபார்த்திடலாமா என கர்ஜிக்கிறார், மகேஷ். அப்படியே முடிகிறது, இந்த புரோமோ.
முந்தைய எபிசோடு:
சிங்கப்பெண்ணே சீரியலில், கதையின் நாயகி ஆனந்தியின் ஊரான செவரக்கோட்டைக்கு, அவரது அலுவலகத்தைச் சேர்ந்தோர் எல்லோரும் அங்கு நடக்கும் கோயில் திருவிழாவைக் காண வேனில் புறப்படுகின்றனர். அதில் ஆனந்தி பணிபுரியும் இடத்தின் முதலாளி மகேஷ், செவரக்கோட்டை ஊருக்குப் போவதே, ஆனந்தியின் பெற்றோரிடம், தான் ஆனந்தியைக் காதலிப்பதைச் சொல்லி, சம்மதம்பெறத்தான் என்று மனதுக்குள் நினைக்கிறார்.
செவரக்கோட்டை பயணம் முடிவதற்குள், நான் தான் பிரச்னையில் உதவிய அழகன் என்று ஆனந்தியிடம் சொல்லப்போவதாக, அன்பு மனதுக்குள் நினைத்துக்கொண்டு பயணப்படுகிறார்.
ஆனந்திக்கு ஊரில் சென்று இறங்கியதும் ஆடல், பாடல், வேட்டு வெடித்து, ஃபிளெக்ஸ் வைத்து பிரமாண்ட வரவேற்பு நடக்கிறது. அவரும் அந்த வரவேற்பில் கலந்துகொண்டு மாலையைப் பெற்றுக்கொண்டு டான்ஸ் ஆடுகிறார்.
பஞ்சம் பிழைக்க ஒத்த ஆளாக ஊரை விட்டு ஓடிட்டு, ஒரு கூட்டத்தையே திரட்டிட்டு வந்திருக்கிறீயா என செவரக்கோட்டையில் இருக்கும் வில்லன் சுயம்புலிங்கம் மனதுக்குள் கடுப்பாகிறார்.
அங்கு வந்திருந்த சுயம்புலிங்கம், அவர்களுக்கு பிரச்சினை கொடுக்க முயற்சிக்கிறார். குறுக்கே வந்த ஆனந்தி அலுவலக முதலாளி மகேஷ், ஏன் தேவையில்லாமல் பிரச்சினை கொடுக்கிறீர்கள் என்று சொல்லி கண்டிக்கிறார்.
இதனையடுத்து சுயம்புலிங்கத்தின் அருகில் இருந்த சேகர், ’டேய் அண்ணன் யாரென்று தெரியுமா? தெரியாமல் வார்த்தையை விடாதீர்கள். ஊர் போய் சேரமாட்டீர்கள்’ என்று மிரட்டுகிறான். இதையடுத்து அவனை கண்டிக்கும் சுயம்புலிங்கம், தான் ஆனந்திக்கு பரிசம்(நிச்சயம்) போட்ட முறை மாமன் என்ற உண்மையை போட்டு உடைக்கிறான். இதைக்கேட்ட எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கின்றனர்.
அதனைதொடர்ந்து ஆனந்தியை பார்த்து பரிதாபப்படும் மகேஷ், தனியாக நடந்து கொண்டிருக்க, அவளிடம் சென்ற மித்ரா என்ன டிஸ்டர்ப் ஆக இருக்கிறாய்’ என்று கேட்கிறாள். அப்போது, அவன், தான் ஆனந்தியை கல்யாணம் செய்துகொண்டு அவளது எல்லா பிரச்சினைகளையும் சரி செய்யப்போகிறேன் என்று கூறுகிறான். இதைக்கேட்ட மித்ரா அதிர்ச்சி அடைகிறாள்.
இன்னொரு பக்கம் அன்புவிடம் அவனது நண்பன், ஆனந்தியிடம், ’நீ உடனே காதலை சொல். காலம் தாமதிக்காதே’’ என்று எச்சரிக்கிறான். இதற்கிடையே ஊரில் கயிறு இழுக்கும் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் ஆனந்தியைப் பழிதீர்க்க
சுயம்புலிங்கத்துடன் மித்ரா கைகோர்க்கிறார். ஆனந்தியுடன் சென்னையில் இருந்துவந்தவர்கள் ஒரு அணியிலும், சுயம்புலிங்கம் அணியினர் எதிர்முனையிலும் கயிறுஇழுக்கும்போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
டாபிக்ஸ்