TOP 10 NEWS: பெண் டிஎஸ்பியை தாக்கியவர்கள் கைது முதல் புதிய காற்றழுத்த பகுதி வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: பெண் டிஎஸ்பியை தாக்கியவர்கள் கைது, சென்னையில் டி.கே.சிவக்குமார், முல்லைப்பெரியாறு விவகாரம், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கம், சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.பாலியல் தொல்லையில் ஈடுபட்டவர் கைது
திருச்சி அருகே அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப்பள்ளி விடுதியில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட மருத்துவர் சாம்சன் என்பவர் கைது.
2.மேகதாது விவகாரம் குறித்து பேட்டி
மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை நிச்சயம் மதிப்போம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உறுதி.
3.தமிழ்நாட்டின் கோரிக்கை நிராகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் விரிவான ஆய்வு மேற்கொள்ள மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. சட்டப்படி 2026ஆம் ஆண்டுதான் நடத்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.
4.பெண் டிஎஸ்பியை தாக்கியவர்கள் கைது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்ற பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 7 பேரை பிடித்து காவல்துறை விசாரணை.
5.பட்டமளிப்பு விழா
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல்.
6.சென்னையில் டி.கே.சிவக்குமார் பேட்டி
மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே அதிக பலன் கிடைக்கும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி. சென்னை மாநகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் 180 டன் காய்கறிக்கழிவு மற்றும் மாட்டுச்சாணம் மூலம் தினசரி 4000 மெட்ரிக் டன் பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது.கர்நாடகாவில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சிவக்குமார் ஆய்வு செய்தார். மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார் இவ்வாறு கூறினார்.
7.வீட்டுமனை பட்டா வழங்கிய உதயநிதி
சென்னை திருவொற்றியூரில் 2000-க்கும் அதிகமானோருக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
8.கூட்டணி குறித்து நேரு பேச்சு
மக்களவை தேர்தலை போன்று சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமையும் சூழல் இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.
9.சீமான் வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்
சாதி பெயரை குறிப்பிட்டு பேசிய விவகாரத்தில் சீமான் மீது போடப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக சென்னை பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் நியமனம்.
10.உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் வரும் செப்டம்பர் 5ஆம்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
டாபிக்ஸ்