Mullaperiyar Dam: 141அடி எட்டிய முல்லைப் பெரியாறு: கேரளாவுக்கு வெள்ள எச்சரிக்கை!
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்வரத்து சராசரியாக விநாடிக்கு 1166 கன அடியாகவும் , நீர் இருப்பு 7396 மி.கன அடியாகவும் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் நீர் -கோப்பு படம்
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. டிசம்பர் 2ஆம் தேதியன்று அணை 140 அடியை எட்டியது. இதனால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு தமிழக நீர்வளத்துறையினர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் 141அடியை எட்டியுள்ளது.இதையடுத்து தற்போது இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .
அணையின் மொத்த உயரம் 152 அடியாக உள்ள போதிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அணையில் 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க அனுமதி உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும் மூன்றாவது மற்றும் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு மதகுகள் வழியாக கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

