TOP 10 NEWS: திமுக மேடையில் ரஜினி காந்த்! முத்தமிழ் முருகன் மாநாட்டில் தள்ளுமுள்ளு! இன்றைய டாப் 10 செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: திமுக மேடையில் ரஜினி காந்த்! முத்தமிழ் முருகன் மாநாட்டில் தள்ளுமுள்ளு! இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 NEWS: திமுக மேடையில் ரஜினி காந்த்! முத்தமிழ் முருகன் மாநாட்டில் தள்ளுமுள்ளு! இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil
Aug 24, 2024 09:30 PM IST

Tamil Top 10 News: முத்தமிழ் முருகன் மாநாடு, கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழா, திமுகவை விமர்சித்த தமிழிசை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: திமுக மேடையில் ரஜினி காந்த்! முத்தமிழ் முருகன் மாநாட்டில் தள்ளுமுள்ளு! இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: திமுக மேடையில் ரஜினி காந்த்! முத்தமிழ் முருகன் மாநாட்டில் தள்ளுமுள்ளு! இன்றைய டாப் 10 செய்திகள்!

1.பாகுபாடு இல்லாத சமத்துவம் வேண்டும்

பக்தர்களின் நம்பிக்கைக்கு திமுக அரசு தடையாக இருந்தது இல்லை, கோவில் கருவறைக்குள் பாகுபாடு காட்டாத சமத்துவம் வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல, அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது என முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். 

2.ஓட்டுக்காகவே முருகன் மாநாடு 

ஓட்டுக்காகவே பழனியில் அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகின்றது. இதுவே சிறுபான்மையினர் மாநாடு என்றால் முதலமைச்சர் நேரில் சென்று தொடங்கி வைக்காமல் இருப்பாரா என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். 

3.முத்தமிழ் முருகன் மாநாட்டில் தள்ளுமுள்ளு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் உணவுக்கூடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு. 

4.கார் பந்தயத்தால் பாதிப்பு இல்லை 

சென்னையில் நடைபெறும் கார் பந்தயம் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்து உள்ளார். 

5.இயக்குநர் நெல்சன் விளக்கம் 

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தன்னிடம் எந்த விசாரணையையும் நடத்தவில்லை, எந்த சம்மனும் அனுப்பபடவில்லை என்று இயக்குநர் நெல்சன் விளக்கம்.

6.மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள தமிழக மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை, தான் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளதாகவும், 2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

7.மாணவர் உடல் ஒப்படைப்பு 

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் உடற்கூராய்வு நடைபெற்று உடல் ஒப்படைப்பு. 

8.ஹெலிகாப்டர் விபத்து 

மும்பையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து.

9.திமுக மேடையில் ரஜினி காந்த் 

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். 

10.கெட்டுப்போன இறைச்சிகளால் சிக்கல் 

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து நிறைய கெட்டுப்போன இறைச்சிகள் தமிழ்நாட்டுக்கு வருகின்றது. ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த உணவு வியாபாரிகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேதனை என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதிஷ் குமார் எச்சரிக்கை.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.