TOP 10 NEWS: சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து முதல் SPB பெயரில் சாலை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்
பாடகர் எஸ்.பி.பி வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயர் வைப்பு, யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து, சென்னையில் பரவலாக மழை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
பாடகர் எஸ்.பி.பி நினைவாக தெரு பெயர்
திரை இசைப் பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
2.10 கோடி பார்வைகளை கடந்த மின் நூலகம்
10 கோடிப் பார்வைகளைக் கடந்து தமிழ் மின் நூலகம் அருஞ்சாதனை புரிந்துள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தகவல்.
3.சென்னையில் பரவலாக மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி. காலை முழுவதும் வெயில் அடித்த நிலையில் எழும்பூர், அண்ணாசாலை, புதுப்பேட்டை, அடையார், கோட்டூர்புரம், உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது.
4.காலாவதி சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்
தமிழ்நாட்டில் உள்ள பல சுங்கச்சாவடிகள் காலாவதியான நிலையில் சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணத்தை வசூலிக்கவே கூடாது. தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கும் போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மக்கள் விரோத போக்கை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை.
5.ஆதவ் அர்ஜூனா மீது அமைச்சர் விமர்சனம்
புகழுக்காக எதையாவது சொன்னால் பிரபலம் ஆகலாம் என ஆதவ் அர்ஜூனா பேசி வருகிறார். விசிக தலைவர் திருமாவளவனே தெளிவு படுத்திய பிறகு கீழே உள்ள யார் எதை சொன்னால் என்ன? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து.
6.சாம்சாங் தொழிலாளர் பிரச்னையை தீருங்கள்
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். பிரச்னைக்கு தீர்வு காண மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதி உள்ளார்.
7.மீனாட்சி அம்மன் கோயில் லட்டு விவகாரம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் லட்டு தரமாக உள்ளது; எந்த கலப்படமும் இல்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டு உள்ளது என உணவு பாதுகாப்பு துறை விளக்கம்.
8.சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து
யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வேறு வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லாத நிலையில் அவரை உடனடியாக விடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு.
9. 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
தமிழ்நாட்டில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யபப்ட்டு உள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு ஈர்க்கப்பட்ட 10 லட்சம் கோடி முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
10.மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை இலக்கியம் (பி.லிட்) படித்து தேர்ச்சி பெற்றவர்களை, அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றும் வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் பி.ஏ(தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.
டாபிக்ஸ்