SPB : 'எனக்கு அவர் வேணும்.. மனைவியிடம் கேட்ட ஒருதலை காதலி' மயக்க நிலைக்குப் போன எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!-spb i want him a one sided girlfriend who asked his wife spb balasubramaniam went unconscious - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Spb : 'எனக்கு அவர் வேணும்.. மனைவியிடம் கேட்ட ஒருதலை காதலி' மயக்க நிலைக்குப் போன எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

SPB : 'எனக்கு அவர் வேணும்.. மனைவியிடம் கேட்ட ஒருதலை காதலி' மயக்க நிலைக்குப் போன எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 29, 2024 06:00 AM IST

SPB : ஏன்னா எனக்கு புத்தி மாறிடுச்சுனா என்ன ஆகும் பாருங்க. இத்தன வருசமா நல்லவர் பாலு அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கவங்க,..அவனா பாட்டு நல்லா பாடுறான் புத்தி சரி இல்லையேன்னு சொன்னாங்கனா.. அப்பவே அந்த நிமிஷத்துலயே தற்கொலை பண்ணிக்கணும் அவ்வளவு தான் என்றார்.

SPB : 'எனக்கு அவர் வேணும்.. மனைவியிடம் கேட்ட ஒருதலை காதலி' மயக்க நிலைக்குப் போன எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!
SPB : 'எனக்கு அவர் வேணும்.. மனைவியிடம் கேட்ட ஒருதலை காதலி' மயக்க நிலைக்குப் போன எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயா டீவியில் ஏற்பாடு செய்யப்பட்ட பயணங்கள் முடிவதில்லை என்ற நிகழ்ச்சியில் எஸ்பிபி கலந்து கொண்டு தனது பாடல்களால் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் எஸ்பிபியிடம் சுவாரஸ்யமான கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

உங்கள் பாடல்களை நிறைய பேர் கேட்டு மயங்கி உங்கள் பாடல்களையே பாடி ப்ரபோஸ் பண்ணியிருப்பாங்க தானே . நீங்களும் லவ் மேரேஜ் தானே பண்ணியிருக்கீங்க. அப்போ நீங்க உங்க மனைவி கிட்ட முதல் முறையாக பாடிய லவ் சாங் என்னனு தெரிஞ்சுக்கலாமா.. என்று கேட்டார்.

அதற்கு எஸ்பிபி இதுவரை நான் பாடுனதே கிடையாது அவங்ககிட்ட.. எல்லாரும் நினைப்பாங்க ரெக்கார்டிங் முடிஞ்ச பின்னாடி போய் உங்க குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவீங்களா.. உங்க மனைவி காதுல ஏதாவது அழகான பாட்டு பாடுனீங்களான்னு.. ஒரு வேளை பாடினாலும், ஏய்யா டெய்லி போய் பாட்டு பாடிட்டு வர்ற. வீட்டுக்கு வந்து கொஞ்சம் அமைதியா இருக்கலாம்லன்னு சொல்லுவாங்க. நா பாடின பாட்டு என்னனு அவங்க கேப்பாங்க. அவங்களுக்கு ரொம்ப இஷ்டம். என் மனைவி ரொம்ப பெக்கியூலியர் டைப் . அது மனசுலயே வச்சுக்கு.. ஒன்னும் சொல்லாது. "She thinks that I am a peculiar" ஆனா மனதுக்குள்ளயே வச்சுக்குட்டு வெளிய சொல்லாது.

எஸ்பிபியை அதிர வைத்த பெண்..

ஆனா நிறைய பேர் கேட்டவங்க எனக்கு யாருமே ப்ரபோஸ் பண்ணல. சம் டைம்ஸ் லவ் லெட்டர்ஸ் எல்லாம் எழுதியிருக்காங்க. ஆனா அழகான லவ்லெட்டர்ஸ்தான். என்ன கட்டிக்கோங்க நா உங்களோட வந்துருப்பேன்னு எல்லாம் இல்ல. ஒரே ஒரு தடவ நடந்தது. ஒரு பெண் ஆந்திராவில் இருந்து வந்து எங்க வீட்டு முன்னாடி உட்காந்து அவர் தான் என் கணவர். அவர் வீட்டுக்குள்ள என்ன அனுப்பனும்ன்னு சொல்லி உட்காந்துட்டாங்க. எனக்கு பயம் ஆகிட்டு. நிஜமான்னு என் மனைவி மட்டும் நம்பிருந்தா என்ன ஆகும்னு பயம் ஆகிட்டு.

என் மனைவி கோலம் போட வெளிய வந்தபோ அந்த பொண்ணு வந்து நா மானசீகமா உங்க கணவர கல்யாணம் பண்ணிக்கிட்டே.. எனக்கு வேற ஒன்றும் தேவையில்ல உங்க வீட்டுல நா வேலைக்காரியா இருப்பேன். அவர் பாடுறது எல்லாம் நா கேட்கணும். அதுதா என் ஆசைன்னாங்க.

அதுக்கு என் மனைவி அவர் வீட்டுல பாடுறதே இல்லமா என்ன கேட்க போற நீ.. இல்ல அவர் கூட ரெக்காடிங்க போகணு சொல்ல ஆமா முதல்ல ரெக்கார்டிங் போக ஆரம்பிப்ப.. அப்பறம் வேற வேற எல்லாம் வரும். தயவு பண்ணி இந்த மாதிரி பைத்தியக்கார தனமா இருக்காத. அவர் மேல அன்பு வச்சுருக்குற. கௌரவம் வச்சுருக்குற.. அது போதும்ன்னாங்க. அந்த பொண்ணு நா போகவே மாட்டே இங்கயே இருப்பேன்னு சொல்லிட்டாங்க..

கடைசியில் நா போலீஸ் காரங்களுக்கு போன் பண்ணி சார் நீங்க மப்டில வாங்க.. அந்த பொண்ண வந்து வேற ஒன்னும் பண்ணாதீங்க அந்த பொண்ணு கொஞ்சம் பைத்தியமா இருக்கு. அது நா டிக்கெட் வாங்கி ரயில்ல ஏத்தினாலும் கூட ஊருக்கு போகுமான்னு கொஞ்சம் டவுட்டு. நீங்க தயவுபண்ணி சென்ட்ரல் ஸ்டேஷன் போயி அந்த பொண்ண ரயில்ல ஏத்தி விட்டுடுங்க சார் என்றேன். நிச்சயமா சார் நாங்க பார்த்துகிறோம்னாங்க ..

லவ் லெட்டர் வருது

ஆனா இப்பதா நிறைய லவ் லெட்டர்ஸ் வருது எனக்கு. அப்பா.. அங்கிள்.. மாமான்னு கூப்பிடுறவங்கன்னு நிறைய லவ் லெட்டர்ஸ் வருது. அந்த ஒவ்வொரு லைன்க்கு நடுப்புறத்துல இருக்குற பீலிங்க நானும் புரிஞ்சுக்க முடியும். அதனால் அங்கயே வைக்குறது பெட்டர். ஏன்னா எனக்கு புத்தி மாறிடுச்சுனா என்ன ஆகும் பாருங்க. இத்தன வருசமா நல்லவர் பாலு அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கவங்க,..அவனா பாட்டு நல்லா பாடுறான் புத்தி சரி இல்லையேன்னு சொன்னாங்கனா.. அப்பவே அந்த நிமிஷத்துலயே தற்கொலை பண்ணிக்கணும் அவ்வளவு தான் என்றார்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.