TOP 10 NEWS: ’வணிகர் சங்கத்தின் வெள்ளையன் மறைவு முதல் விசிகவுக்கு உதயநிதி பதில் வரை!’ டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவு, ஆசிரியர்கள் வேலை நிறுத்தம், மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவுக்கு விசிக அழைப்பு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் மறைவு
நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்.
2.ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
டிக்கோ ஜாட் எனப்படும் தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம்.
3.தூர்வார நிதி ஒதுக்கீடு
ஊரக பகுதிகளில் சிறுபாசன ஏரிகளை தூர்வார 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
4.அன்பில் மகேஷ் விளக்கம்
போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி.
5.விசிக மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து உள்ளார்.
6.விசிகவின் அழைப்புக்கு ஜெயக்குமார் பதில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு செல்வது குறித்து அதிமுக கட்சித் தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து.
7.அதிமுகவுக்கு அழைப்பு - உதயநிதி கருத்து
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை அழைத்தது அவர்களது விருப்பம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து
8.திமுகவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை
மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு கொடுத்ததால் திமுகவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் பதில்.
9.இமானுவேல் சேகரனுக்கு பாமக புகழாரம்
தியாகி இமானுவேல் சேகரனார் போற்றுதலுக்கு உரியவர். ஆங்கிலம், இந்தி, ரஷிய மொழி உள்ளிட்ட 7 மொழிகளை கற்றறிந்தவர். தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர். இவ்வளவு சிறப்பு மிக்க இவரது நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய நிகழ்வுகள் எதுவும் இல்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை .
10.திமுகவுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலைவாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் திகழும் தருமபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தருமபுரி & காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தருமபுரி மாவட்ட மக்கள்நலன் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
டாபிக்ஸ்