TOP 10 NEWS: மாரியப்பன் தங்கவேலுவுக்கு குவியும் பாராட்டு! ஈபிஎஸ் குடும்பத்திற்கு பறந்த நோட்டீஸ்! இன்றைய டாப் 10 நியூஸ்!-todays afternoon top 10 news including appreciation for paralympian mariyappan thangavelu court notice to eps - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: மாரியப்பன் தங்கவேலுவுக்கு குவியும் பாராட்டு! ஈபிஎஸ் குடும்பத்திற்கு பறந்த நோட்டீஸ்! இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: மாரியப்பன் தங்கவேலுவுக்கு குவியும் பாராட்டு! ஈபிஎஸ் குடும்பத்திற்கு பறந்த நோட்டீஸ்! இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Sep 04, 2024 01:59 PM IST

மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாராட்டு, ஈபிஎஸ்க்கு நீதிமன்றம் நோட்டீஸ், தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையம் , வடகிழக்கு பருவமழை குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: மாரியப்பன் தங்கவேலுவுக்கு குவியும் பாராட்டு! ஈபிஎஸ் குடும்பத்திற்கு பறந்த நோட்டீஸ்! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: மாரியப்பன் தங்கவேலுவுக்கு குவியும் பாராட்டு! ஈபிஎஸ் குடும்பத்திற்கு பறந்த நோட்டீஸ்! இன்றைய டாப் 10 நியூஸ்!

1.தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையம் 

சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்க சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 

2.சேலத்தில் வெடி விபத்து 

சேலம் அயோத்யா பட்டிணம் அருகே பட்டாசு குடோனில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. 4 பேர் படுகாயம்.

3.திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம் 

நாமக்கல் அருகே அரசுப்பள்ளியின் சமையல் கூடத்தில் மனிதக் கழிவு வீசப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். 

4.வடகிழக்கு பருவமழை குறித்து ஆலோசனை 

வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகள் உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனை.

5.அடிக்க பாய்ந்த காவலர் கைது 

தருமபுரியில் உணவக உரிமையாளரை ஷூவை கழற்றை அடிக்கப்பாய்ந்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம். 

6.இயக்குநர் அட்லீக்கு நோட்டீஸ்

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் கதை திருடப்பட்டதாக் தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் அட்லி மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ். 

7.விஜயை மறைமுகமாக சாடும் அமைச்சர் 

முதல் நாள் முதல் காட்சிக்கு 2000 ரூபாய்க்கு டிக்கெட் விற்கும் நடிகர்களா நாட்டை காப்பார்கள் என்று நடிகர் விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம். 

8.வன்கொடுமை சட்டத்தி வழக்கு 

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. 

9.ஈபிஎஸ்க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் பதில் தர உத்தரவு. 

10.மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்து 

பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் வாழ்த்து.  

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.