TOP 10 NEWS: ஆதவ் அர்ஜூனாவை சாடும் ஆ.ராசா முதல் சீசிங் ராஜா என்கவுண்டர் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ஆ.ராசா கண்டனம், மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் கடிதம், திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம், சீசிங் ராஜா என்கவுண்டர் குறித்து போலீஸ் விளக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.மீனவர்களை விடுவிக்க கோரி கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைந்து விடுக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதை தடுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், சிறைபிடிக்கப்பட்டு உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
3.ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா மீது என்கவுண்டர். 6 கொலை உட்பட 39 வழக்குகள் சீசிங் ராஜா மீது நிலுவையில் உள்ளது.
4.சீசிங் ராஜா என்கவுண்டர் குறித்து போலீஸ் விளக்கம்
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜாவுக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை. குற்றவாளிகளை கைது செய்தால் குடும்பத்தினர் மூலம் வீடியோ வெளியிடுவது ட்ரண்டாக உள்ளது என சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி பேட்டி.
5.ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் சுமூக தீர்வு எட்டப்பட்டதாக அறிவிப்பு.
6.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு தடை
ஆபாசப்படங்களை தனியாக பார்ப்பது குற்றம் அல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு தடை.
7.கிருஷ்ணா நதிநீர் தமிழகம் வந்தது
கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு வந்தது. தமிழக அரசு அதிகாரிகள் மலர்தூவி நீரை வரவேற்றனர்.
8.சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உத்தரவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
9.கோயம்பேட்டை பூங்காவாக மாற்ற வேண்டும்
சென்னையில் கிண்டி பூங்கா தவிர, கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் அமைந்துள்ள 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா அமைந்துள்ள 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் கிடைக்கும் மொத்தம் 66.4 ஏக்கர்பரப்பளவில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
10.திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம்
இந்த 40 மாத கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கான வெள்ளை அறிக்கையினைக் கேட்டேன். இந்த முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளை அறிக்கையை வெளியிட மறுக்கிறார். அது சரி, சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.சிலரை சிலநாள் ஏமாற்றலாம்.பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
டாபிக்ஸ்