தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  A Raja: 8 முறை வந்தும் வேலைக்கு ஆகல! தமிழ்நாட்டுல பாஜக ஜீரோ! உத்தர பிரதேசம் மக்களுக்கு நன்றி! ஆ.ராசா ஆவேசம்!

A Raja: 8 முறை வந்தும் வேலைக்கு ஆகல! தமிழ்நாட்டுல பாஜக ஜீரோ! உத்தர பிரதேசம் மக்களுக்கு நன்றி! ஆ.ராசா ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Jul 01, 2024 08:02 PM IST

Lok sabha : நடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 370 இடங்களில் வெல்வோம். தேசிய ஜனநாயக கூட்டணியோடு சேர்த்து 400 இடங்களை வெல்வோம் என்று கூறினார். ஆனால், இப்போது 240 இடங்களாக குறைக்கப்பட்டு உள்ளது.

8 முறை வந்தும் வேலைக்கு ஆகல! தமிழ்நாட்டுல பாஜக ஜீரோ! உத்தர பிரதேசம் மக்களுக்கு நன்றி! மக்களவையில் ரவுண்டு கட்டிய ஆ.ராசா!
8 முறை வந்தும் வேலைக்கு ஆகல! தமிழ்நாட்டுல பாஜக ஜீரோ! உத்தர பிரதேசம் மக்களுக்கு நன்றி! மக்களவையில் ரவுண்டு கட்டிய ஆ.ராசா! (PTI)

தமிழ்நாட்டில், திராவிட சித்தாந்தம் பா.ஜ.கவின் பாசிசத்தை சரியாக நிராகரித்து உள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் ஆ.ராசா கூறி உள்ளார். 

குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய திமுக எம்.பி. ஆ.ராசா, குடியரசுத் தலைவர் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எனது மற்றும் எனது கட்சியான திமுக சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வது எனது கடமையாகும். இருப்பினும், பேச்சின் உண்மைத்தன்மையையும் உள்ளடக்கத்தையும் பற்றி நான் குறிப்பிட வேண்டும்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.