தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nilakanda Shastri: சோழர் வரலாற்றை ஏட்டில் எழுதிய நீலகண்ட சாஸ்திரி பிறந்தநாள் இன்று…!

Nilakanda Shastri: சோழர் வரலாற்றை ஏட்டில் எழுதிய நீலகண்ட சாஸ்திரி பிறந்தநாள் இன்று…!

Kathiravan V HT Tamil
Aug 12, 2023 06:10 AM IST

”அவரது நூல்களை ஆங்கிலத்தில் எழுதி இருந்தாலும் சோழர்கள், தமிழர் வரலாறும் பண்பாடும், தென்னிந்தியாவை பற்றிய வெளிநாட்டினர் குறிப்புகள் உள்ளிட்ட சில நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது”

வரலாற்றாசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி - பொன்னியில் செல்வன் திரைப்படம்
வரலாற்றாசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி - பொன்னியில் செல்வன் திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவின் தவிர்க்க முடியாத பேரசுகளில் ஒன்றான சோழர் வரலாற்றை இவரின் புத்தக்கத்தை படிக்காமல் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. இன்றைக்கு சோழர்களில் வரலாற்றை குறித்து வரும் நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் குறித்த புத்தகங்கள்தான்.

பிறப்பும் கல்வியும்

1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தெலுங்கு பிராமணர் குடும்பத்தில் பிறந்த நீலகண்ட சாஸ்திரி அங்கேயே தனது தொடக்கக்கல்வியை பயின்றார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் இடைநிலை வகுப்பும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ பட்டமும் பெற்ற அவருக்கு முகலைப்படிப்பிற்காக மாதம் 20 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

விரிவுரையாளர் முதல் முதல்வர் வரை

1913ஆம் ஆண்டு தொடங்கி 1918ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி இந்து கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த நீலகண்ட சாஸ்திரிக்கு பனாரஸ் இந்து கல்லூரியில் வேலை கிடைத்தால் வாரணாசிக்கு இடம்பெயர்ந்தார். சர் ராஜா அண்ணாமலை செட்டியாரிடம் அறிமுகம் ஏற்படவே 1920ஆம் ஆண்டுக்கு பிறகு சிதம்பரம் ஸ்ரீ மீனாட்சி கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்.

வரலாற்று துறை தலைவர்

1929ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவரான சாஸ்திரியார் 1947ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை அங்கேயே பணியாற்றினார். 1952 முதல் 1956 வரை மைசூரு பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் (Indology) துறையின் தலைவராகவும் பின்னர் மைசூரு மாநில தொல்லியல் துறை இயக்குநராகவும் தனது பங்களிப்பை அளித்தார்.

1956ஆம் ஆண்டு யுனெஸ்கோ மற்றும் சென்னை பல்கலைக்கழகம் நிறுவிய தென்கிழக்கு ஆசிய பாரம்பரிய கலாச்சார கல்வி நிறூவன இயக்குநராக 1971ஆம் ஆண்டு வரை இருந்தார்.

வரலாற்று ஆய்வுகள்

தென்னிந்திய வரலாற்றை ஆராய்வதில் முக்கிய ஆய்வாளர்களில் ஒருவாராக இருந்த நீலகண்ட சாஸ்திரி கல்வெட்டுக்கலை ஆராய்தல், ஆவணப்படுத்துதல், அதனை இலக்கிய குறிப்புகளோடு ஒப்பீடு செய்தல் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்.

கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டு இந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, கே.என்.சிவராஜ் பிள்ளை, மனோன்மணீயம் சுந்தரானார் உள்ளிட்டோரின் ஆய்வுகள் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் ஆய்வுக்கு முக்கிய துணையாக இருந்தது.

1929ஆம் ஆண்டு நீலகண்ட சாஸ்திரி எழுதிய முதல் நூலான பாண்டிய அரசு (Pandiyan Kingdom) என்ற நூலும் 1935ஆம் ஆண்டில் சோழர்கள் (The Cholas) என்ற நூலும் வெளிவந்தது.

நான்கு படிநிலைகளை கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ஆராய்ந்தார்.

முதலில் கல்விட்டுக்கள், செப்பேடுகள், நாணயங்களில் உள்ள மன்னர்கள் பெயர்கள், அடைமொழிகள் மற்றும் அதனை தொடர்புடைய செய்திகளை அடையாளம் காண்பது.

கல்வெட்டுக்களில் உள்ள ஆண்டுகள் அடிப்படையில் ஒரு கல்வெட்டை செய்தியை பிற கல்வெட்டு செய்திகள் உடன் இணைத்து மன்னர்களின் காலத்தை படிநிலை செய்து அவர்களின் தலைமுறைகளை அடையாளம் காண்பது.

கல்வெட்டுசெய்திகளை புரிந்து கொள்ள பழந்தமிழ் நூல்களில் உள்ள தரவுகளை பயன்படுத்துவது.

மன்னர்கள் வாழ்ந்த காலம், தலைமுறைகளின் தொடர்ச்சி ஆகியவற்றை தொல்லியலொ சான்றுகளை கொண்டு வகுத்துவிட்டு மேலதிகாஅன பணொபாட்டு சித்தரிப்புகளுக்கு இலக்கிய செய்திகளை பயன்படுத்தி கொள்வது ஆகியன இருந்தது.

விமர்சனம்

இருப்பினும் தமிழ் வரலாற்றின் அடிப்படை தரவுகளான தமிழ் இலக்கியங்கள், தமிழ் கல்வெட்டுக்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ய போதுமான தமிழறிவு கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிக்கு இல்லை என்றும் தமிழ் செய்யுள்கள் மற்றும் கல்வெட்டுக்கள் சொல்லும் பொருளை அறிய அவர் எஸ்.வையாபுரி பிள்ளையை சார்ந்து இஉர்ந்தார் என்றும் ஆ.இரா வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்.

மறைவு

தொல்லியல் மற்றும் வரலாற்று துறையில் நீலகண்ட சாஸ்திரியின் பங்களிப்பிற்காக 1958ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி சென்னையில் அவர் காலமானர்.

அவரது நூல்களை ஆங்கிலத்தில் எழுதி இருந்தாலும் சோழர்கள், தமிழர் வரலாறும் பண்பாடும், தென்னிந்தியாவை பற்றிய வெளிநாட்டினர் குறிப்புகள் உள்ளிட்ட சில நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்