தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Today Gold Rate In Chennai

Today Gold Rate: நகை வாங்க போறீங்களா… இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

Aarthi V HT Tamil
Jan 19, 2023 11:42 AM IST

சென்னையில் தங்கம் விலை மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

தங்கம் விலை
தங்கம் விலை

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.  சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்தது. இதேபோல் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 42,360-க்கு விற்பனையானது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.74.80 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74 ஆயிரத்து 800 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் சென்னையில் இன்று ( ஜனவரி 19 ) தங்கம் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. அதன்படி இன்று ( ஜனவரி 19 ) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 42 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த 3 நாட்களில் மட்டும் இதுவரை கிராமுக்கு 27 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் பெண்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெள்ளி விலை

வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.80ஆக இருந்த நிலையில் இன்று ( ஜனவரி 19 ) ஒரு ரூபாய் 30 காசு குறைந்து, ரூ.73.50க்கு விற்பனையாகிறது.

 கிலோவுக்கு ரூ.1,300 குறைந்து ரூ.73 ஆயிரத்து 500 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் vs 22 காரட்

தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்