TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி ஏழு!
TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!
TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி ஏழு!
TNPSC Group 4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக, நடத்தப்படும் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுக்குப், பலர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அரசியலமைப்புப் பகுதியில் சராசரியாக 11 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, அரசியலமைப்புப் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் இன்றும் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம்.
- தமிழ்நாட்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி, வாலாஜாபேட்டை நகராட்சி ஆகும்.
- நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் உள்ளன. ஒன்று, மக்களவை. இன்னொன்று, மாநிலங்களவை.
- தேசிய ஊராட்சி தினம் ஏப்ரல் 24 ஆகும்.
- இந்திய நாடாளுமன்றத்தின் பழைய கட்டடத்தை எட்வின் லூட்டியன்ஸ் மற்றும் ஹெர்ப்பர்ட் பேக்கர் என்னும், பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர்கள், 1912ஆம் ஆண்டு வடிவமைத்தனர். இந்த கட்டடம் 1921இல் ஆரம்பித்து 1927ல் கட்டி முடிக்கப்பட்டது.
- பஞ்சாயத்து ராஜ் என்னும் பெயர் வைத்தவர் மகாத்மா காந்தி ஆவார்.
- உள்ளாட்சியில் ரிப்பன் பிரபுவின் பங்கு: உள்ளாட்சி அமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்னைகளை சமாளித்து, 1882ஆம் ஆண்டு, ரிப்பன் பிரபு தீர்மானத்தை நிறைவேற்றி அகற்றினார். கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு, அதிகாரத்தை உள்ளாட்சி நிர்வாக உரிமைகளை வழங்கும் விதமாக பல சட்டங்களைக் கொண்டு வந்தார்.
- காந்தியின் கிராம ராஜ்ஜியம்: கிராமப்புறங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட, கிராம சுயராஜ்யம் உருவாக வேண்டும். இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் தான். கிராம குடியரசு என்னும் பஞ்சாயத்துகள் உருவாகவேண்டும் என காந்தி கூறினார்.
- கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள்: 18 வயது நிறைவடைந்த, அந்த ஊராட்சி வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள், கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்.
- மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆசிரியர்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்.
- கிராம சபைக் கூட்டங்கள் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தினங்களில் கூடுகிறது. சிலநேரங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும் கூட்டப்படுகின்றன.
- சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படுகிறது.
- ஜீப்ரா கிராஸிங் எனப்படும் கருப்பு வெள்ளைக் கோடுகள், இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்டன.
- ஒவ்வொருவரும் ஒரு இடத்துக்கு தனித்தனியாக கார் அல்லது பைக்கில் செல்வதற்குப் பதிலாக, ஒரே வாகனத்தில் செல்வது,’கார்பூலிங்’ எனப்படுகிறது.
- இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சத்து 30 ஆயிரம் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தியா, உலகின் மோசமான விபத்துகளைக் கொண்ட நாடாகும்.
- ரக்ஷா (Raksha Safe Driving) என்பது தானியங்கி சென்சார் ஆகும். இந்து வாகனங்களில் பொருத்தப்பட்டால், தற்போது வாகனம் எங்கு உள்ளது என்பதையும் வாகன இயந்திரத்தின் செயல்பாட்டையும் அறிய முடியும்.
- இந்தியாவில் ஜனவரி 25ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
- இருக்கை பெல்ட்டை போடுவதன் மூலம் , சாலை விபத்தில் 51 விழுக்காடு இறப்பைத் தடுக்கலாம்.
- ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ வசதியுடன் கூடிய ஊர்தியைப் பெற, காவல் மற்றும் தீயணைப்புசேவைகளைப் பெற, சாலையில் விபத்தினால் பாதிக்கப்பட்டால் உதவிக்கு 108 என்ற அவசர கால ஊர்தி எண் 108ஐ பயன்படுத்தலாம்.
- விவிபேட் - Voters Verified Paper Audit Trial - மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒருவர் தாம் செலுத்திய, வாக்கு சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பை 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.