தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vande Bharat Train : சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது.. ரயில் நிலையங்களில் நிற்கும் நேரம் இதோ!

Vande Bharat Train : சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது.. ரயில் நிலையங்களில் நிற்கும் நேரம் இதோ!

Divya Sekar HT Tamil
Sep 23, 2023 10:32 AM IST

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது. வரும் 25ஆம் தேதி முதல் பயணிக்க ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்

ட்ரெண்டிங் செய்திகள்

திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் 7 மணிநேரம் 50 நிமிடங்களில் 652 கி.மீ தூரத்தை கடந்து சென்னையை மதியம் 1:50 மணிக்கு சென்றடைகிறது. இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு நெல்லைக்கு வந்தடையும்.

இந்த ரயிலில் 540 பயணிகள் பயணம் செய்யலாம். 52 பேர் பயணிக்கக்கூடிய ஒரு எக்ஸிகியூட்டிவ் பெட்டி உள்ளிட்ட 8 பெட்டிகள் உள்ளன. மற்ற 7 பெட்டிகளிலும் தலா 76 பேர் பயணிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தொடக்க விழா நடைபெற்றாலும் திங்கட்கிழமை இருந்து வழக்கமாக சேவை தொடங்கப்படும்.

சென்னை - நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கான கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏசி சொகுசு வகுப்பு கட்டணம், சாதாரண சேர் கட்டணம் என இரண்டு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உணவு, ஜிஎஸ்டி முன்பதிவு என அனைத்தும் சேர்த்து ஏசி சொகுசு வகுப்புக் கட்டணம் ரூ.3,025 ஆகவும், சாதாரண ஏசி சேர் கார் கட்டணம் ரூ.1,620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முன்பதிவு கட்டணம், உணவு, ஜிஎஸ்டி என அனைத்தும் அடங்கும்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது. வரும் 25ஆம் தேதி முதல் பயணிக்க ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வந்தே பாரத் ரயில் நிலையங்களில் நிற்கும் நேரம் இதோ

நெல்லை டூ சென்னை

6 AM - நெல்லை

7.15 AM  - விருதுநகர்

7.50 AM - மதுரை

8.40 AM  - திண்டுக்கல்

9.50 AM  - திருச்சி

11.54 AM  - விழுப்புரம்

1.13 PM  - தாம்பரம்

1.50 PM  -  சென்னை எழும்பூர்

சென்னை டூ நெல்லை

2.50 PM - சென்னை எழும்பூர்

3.13 PM - தாம்பரம்

4.39 PM - விழுப்புரம்

6.40 PM - திருச்சி

7.56 PM - திண்டுக்கல்

8.40 PM - மதுரை

9.13 PM - விருதுநகர்

10.50 PM - நெல்லை

ரயிலில் ஒலிப்பெருக்கி அறிவிப்புகள் இடம்பெறும். உணவு பரிமாறப்படும். ஊனமுற்றோருக்கான வசதிகள், இலவச வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கிறது. வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்