தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Thief Got Arrested In 48 Hours In Vellore Crime Case

Thief Arrested: கோயிலுக்கு சென்றவர் வீட்டில் கொள்ளை… குல்லாவால் கைதான திருடன்

Aarthi V HT Tamil
Feb 21, 2023 12:33 PM IST

வேலூரில் திருட்டு சம்பவம் நடைபெற்ற 48 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவலர்களை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

குல்லாவால் கைதான திருடன்
குல்லாவால் கைதான திருடன்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் சிவராத்திரி நாளில் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சென்றுவிட்டு அதிகாரலை 2 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைந்த நிலையிலும் அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  

உடனே இது குறித்து அரியூர் காவல் நிலையத்தில் நரேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் செந்தில் குமார், உதவி ஆய்வாளர் ரேகா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

முதற்கட்டமாக வீட்டுக்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கருப்பு உடையுடன் சிகப்பு குல்லா அணிந்திருந்த ஒல்லியான இளைஞர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் யார் என அடையாளம் தெரியாத நிலையில் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அதே தெருவில் சிகப்பு குல்லா அணிந்திருந்த ஒல்லியான இளைஞர் அங்கு இங்கும் நடந்து சென்றான். அவனை பிடித்து விசாரணை செய்த போது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

மேலும் அவர், சித்தேரி ஆஞ்சநேயர் கோயில் தெருவைச் சேர்ந்த அர்ஜுன் ராஜ்குமார் (19) என்பது தெரியவந்தது. அத்துடன் ஏற்கனவே அடிதடி வழக்கில் அரியூர் காவல் நிலையத்தில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்திருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து நரேஷ் குமார் வீட்டில் திருடிய தங்க நகைகள், வெள்ளி பொருட்களையும் உதவி ஆய்வாளர் ரேகா பறிமுதல் செய்து, அர்ஜுன் ராஜ்குமாரை சிறையுல் அடைத்தார்.

திருட்டு சம்பவம் நடைபெற்ற 48 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவலர்களை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்