தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rahul Case: ராகுலுக்கு தீர்ப்பளித்த நீதிபதி நாக்கை அறுப்பேன் - சர்ச்சை பேச்சு

Rahul Case: ராகுலுக்கு தீர்ப்பளித்த நீதிபதி நாக்கை அறுப்பேன் - சர்ச்சை பேச்சு

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 07, 2023 11:45 AM IST

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே காங்கிரஸ் கட்சியின் SC/ST பிரிவு சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

ட்ரெண்டிங் செய்திகள்

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே காங்கிரஸ் கட்சியின் SC/ST பிரிவு சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.வர்மாவின் நாக்கை அறுப்பேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதனையடுத்து வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் மணிகண்டன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'எல்லா திருடர்களும் ஏன் 'மோடி' என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?' என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பா.ஜனதா எம்எல்ஏ புர்னேஷ் மோடி, ராகுலுக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஒட்டுமொத்த 'மோடி' சமூகத்தையும் ராகுல் இழிவுபடுத்தி விட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இறுதிக்கட்ட விசாரணை கடந்த 17-ந் தேதி முடிவடைந்தது.சூரத் நீதிமன்ற தலைமை ஜூடியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பு வழங்கினார்.

இதில் 2 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.15,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 499 (அவதூறு), 500 (அவதூறுக்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் அவரை குற்றவாளி என்று அறிவித்தார் நீதிபதி. மேலும், அவருக்கு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய ஏதுவாக ஜாமினும் அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்