தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'தமிழகத்தில் எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி வருகின்றன'- விளாசும் ஆளுநர் தமிழிசை

'தமிழகத்தில் எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி வருகின்றன'- விளாசும் ஆளுநர் தமிழிசை

Karthikeyan S HT Tamil
Jul 05, 2023 10:48 AM IST

Tamilisai Soundararajan: தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "ஆன்மிகத்தில் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாத ஒரு நம்பிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அது குறைவாக உள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் கூடுதல் பேருந்துகளும், ரயில்களும் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால் பாரபட்சம் இல்லாமல் இருக்கும். அதுபோன்று இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விழாவுக்கு மட்டும் கூடுதல் ரயில் சேவைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. எனவே, பாரபட்சம் இல்லாத ஆன்மிக நிலைமை இருக்க வேண்டும். நமது ஆன்மிகம் உலகிற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல் நிலையம் வருகின்றன. காவல் நிலையங்களில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள கஞ்சாவுக்கு பாதுகாப்பு இல்லை. நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை சமர்ப்பிக்கும் சூழல் உள்ளது. கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவர் தப்பித்துவிட்டனர்.

மேலும், காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவிற்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? என்ற ஒரு பெரிய பிரச்னை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னையில் கஞ்சா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவர், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாக போலீஸார் கூறியதையடுத்து வழக்கிலிருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதை சுட்டிக்காட்டி தெலங்கானா ஆளுநர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்