தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரம்! அமித்ஷாவிடம் பற்ற வைத்த ஆளுநர்! அதிரடி ட்வீட் அதிரும் திமுக!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரம்! அமித்ஷாவிடம் பற்ற வைத்த ஆளுநர்! அதிரடி ட்வீட் அதிரும் திமுக!

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரம்! அமித்ஷாவிடம் பற்ற வைத்த ஆளுநர்! அதிரடி ட்வீட் அதிரும் திமுக!

Kathiravan V HT Tamil
Jul 18, 2024 01:08 PM IST

மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி உள்ளார்

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரம்! அமித்ஷாவிடம் பற்ற வைத்த ஆளுநர்! அதிரடி ட்வீட் அதிரும் திமுக!
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரம்! அமித்ஷாவிடம் பற்ற வைத்த ஆளுநர்! அதிரடி ட்வீட் அதிரும் திமுக!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் ஜூலை மாத இறுதியில் நிறைவடைய உள்ள நிலையில் டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய நிலையில், இன்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உரையாடி உள்ளார். 

இது தொடர்பாக ட்வீட் செய்து உள்ள அவர்,

டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது.." என பதிவிட்டு உள்ளார். 

தமிழ்நாட்டை உலுக்கும் கொலைகள் 

கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் பேசு பொருள் ஆனது. 

அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஏற்கெனவே 11 பேர் கைது

இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கிடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவேங்கிடம் என்கவுண்டர்

இந்த நிலையில் காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கிடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் வழக்கறிஞருமான் மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடம் காவல்துறையினர் இன்றைய தினம் விசாரணை நடத்தினர்.

இதில் கைது செய்யப்பட்டு உள்ள திமுக வழக்கறிஞர் அருண் என்பவரின் மனைவி உடன் மறைந்த பிரபல தாதாவின் மனைவி மலர்கொடி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு இடையே நடைபெற்ற பணப்பரிவர்தனை குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

திமுக நிர்வாகியின் மகன் கைது

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இவரது தந்தையான குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.