தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ppg Shankar Murder: பதற வைக்கும் பாஜக பிரமுகர் கொலை: 9 பேர் சரண்

PPG Shankar Murder: பதற வைக்கும் பாஜக பிரமுகர் கொலை: 9 பேர் சரண்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 28, 2023 01:17 PM IST

PPG Shankar Murder: பிபிஜி சங்கர் கொலை வழக்கில் 9 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பிபிஜி சங்கர்
கொலை செய்யப்பட்ட பிபிஜி சங்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர். இவர் வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பா.ஜ.க பட்டியல் அணியின் மாநிலப் பொருளாளராகவும் இருந்து வந்தார். பல்வேறு குற்ற வழக்குகளை கொண்ட சங்கர், நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

இந்த நிலையில் காரில் சென்னையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த இவரை சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஒரு மர்மகும்பல் வழிமறித்து காரின் மீது நாட்டு வெடி குண்டு வீசியுள்ளனர். இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றது. பின்னர் காரில் இருந்து வெளியேறிய சங்கர் சாலையில் ஓடியுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய 9 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 20 - 25 வயது மதிக்கத்தக்க 9 பேர் 13வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்துள்ளனர்

முன்னதாக அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் "வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர் அவர்கள், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது.

பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்