Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

Jul 10, 2024 07:20 PM IST Karthikeyan S
Jul 10, 2024 07:20 PM , IST

  • Vikravandi By Election: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கியது.

(1 / 6)

276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 42 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

(2 / 6)

காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர். குறிப்பாக வயது முதிர்ந்தோர் சக்கர நாற்காலியில் வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியதை காண முடிந்தது.

(3 / 6)

இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

(4 / 6)

இந்தநிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன. 

(5 / 6)

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில், இதுவரை 1.84 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்