தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Sattai Duraimurgan Along With Other Naam Tamilar Party Administrators Appear In Nia Office At Chennai

NIA: விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்போம்! சாட்டை துரைமுருகன் உள்பட 3 பேர் பேர் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்

Feb 07, 2024 09:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 07, 2024 09:30 PM IST
  • நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன், கோவை முருகன் உள்பட பலரது வீடுகளில் கடந்த 2ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2022ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சோதனை நடைபெற்றதாகவும், என்ஐஏ விசாரணைக்கு ஒத்துழைத்தால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனவும் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். என்ஐஏ அனுப்பிய சம்மன் அடிப்படையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் தென்காசியை சேர்ந்த இசை மதிவாணன் மற்றும் கோவையை சேர் முருகன் ஆகிய மூன்று பேர் விசாரணைக்காக ஆஜராகினர். என்ஐஏ விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பை தருவதாக தெரிவித்த நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் சங்கர், தேர்தல் நேரத்தில் கட்சியின் செயல்பாட்டை முடக்கும் நோக்கத்தோடு என்ஐஏ செயல்படுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
More