Tamil Top 10 News: ரவுடி நாகேந்திரன் மனு தள்ளுபடி முதல் மாஜி அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை உறுதி வரை - டாப் 10 நியூஸ்
Tamil Top 10 News: ரவுடி நாகேந்திரன் மனு தள்ளுபடி, ஆளுநருக்கு பதிலடிக கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி உள்ளிட்ட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
Afternoon Tamil Top 10 News: தமிழகம் முழுவதும் நிகழ்ந்த அரசியல் முக்கிய நிகழ்வுகள் உள்பட அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
ரவுடி நாகேந்திரனின் மனைவி மனு தள்ளுபடி
பகுஜன் சமாஜ் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரனை என்கவுண்டர் செய்யக்கூடாது என அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். நாகேந்திரன் சிறையில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் எதன் அடிப்படையில் என்கவுண்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆளுநர் விமர்சனத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டும் கல்விமுறைதான் சிறந்த கல்விமுறை. அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிந்திக்க வைக்கின்றன, ஏன், எதற்கு என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை உள்ளது. தமிழ்நாட்டின் கல்விமுறையை யாரும் குறை சொல்வதை ஏற்க முடியாது. அப்படி குறை சொன்னால் அது நம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவமதிப்பதற்கு சமம் என்று ஆளுநர் விமர்சனத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் மாநாட்டுக்கு பின் கூட்டணி பற்றி முடிவு!
நடிகர் விஜய் மாநாடு நடத்தி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர் தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கார் ரேஸ் நடத்த ஒரே இரவில் அனுமதி பெற முடிகிறது, விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் அரசுக்கு என்ன பிரச்னை? என்றும் மதுரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகநாந்த் பேட்டியளித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு
அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஆப்டம் இன்சைட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ரோஜார் கானார், யுனைடெட் ஹெல்த்கேர் குழுமத்தின் முதுநிலை துணைத் தலைவர் ஜான் மியாட் ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் புதிய போக்குவரத்து நடைமுறை
சென்னையில் ஒலி மாசை கட்டுப்படுத்த 'சிக்னலில் தண்டனை' என்ற புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. சிக்னல்களில் டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட சத்தம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து சிவப்பு விளக்கு மட்டுமே எரியும் வகையில் கொண்டுவரப் படவுள்ளது. போக்குவரத்து காவலர்களுக்கும் Ear plug வழங்கப்பட உள்ளது.
வ.உ.சிதம்பரனார் பெருமையைப் போற்றுவோம்!
ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க. நாட்டுத் தொண்டும் - மொழித் தொண்டும் தனது இரு கண்கள் என வாழ்ந்திட்ட அந்தப் பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் நீக்கம்
திருவள்ளூர் அடுத்த தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் பி.வெங்கடேசன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஊராட்சிக்கு நிதி இழப்பு செய்தது, சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதால் அவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விஜய் பட தலைப்பில் சனாதனம் - ரவிக்குமார்
நடிகர் விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம் உள்ளதாக விசிக எம்.பி ரவிக்குமார் விமர்ச்சித்துள்ளார். The Greatest Of All Time என்பது ஒரு சனாதன கருத்தில்லையா?, காலமெல்லாம் பெரியது இதுதான் என்றால் காலம் மாறினாலும் இது மாறது என்று தானே அர்த்தம். 'என்றும் மாறாதது' என்பதுதானே 'சனாதனம்' என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்கு தலைப்பு வைத்தார்களா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி
ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி, அவரது கணவருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி - மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு. 1991-96 ஜெயலலிதா அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரா குமாரி, மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்திராகுமாரி, கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு வழங்கியது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இந்திராகுமாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
டாபிக்ஸ்