Thalapathy Vijay: அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்கள்..முதலிடத்தில் ஷாருக் - டாப் இடத்தில் தளபதி விஜய் - லிஸ்ட் பாருங்க
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்கள்..முதலிடத்தில் ஷாருக் - டாப் இடத்தில் தளபதி விஜய் - லிஸ்ட் பாருங்க

Thalapathy Vijay: அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்கள்..முதலிடத்தில் ஷாருக் - டாப் இடத்தில் தளபதி விஜய் - லிஸ்ட் பாருங்க

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 05, 2024 01:05 PM IST

Vijay Income Tax: இந்த ஆண்டுக்கான வருமான வரி முறையாக செலுத்தியதோடு, அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்கள் லிஸ்டில் டாப் 10 இடத்தில் இருக்கும் ஒரே தென்னிந்திய சினிமா நடிகராக உள்ளார். இந்த லிஸ்டில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.

Vijay Income Tax: அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்கள்..முதலிடத்தில் ஷாருக் - டாப் இடத்தில் தளபதி விஜய் - லிஸ்ட பாருங்க
Vijay Income Tax: அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்கள்..முதலிடத்தில் ஷாருக் - டாப் இடத்தில் தளபதி விஜய் - லிஸ்ட பாருங்க

இவருக்கு அடுத்தபடியாக கோலிவுட் டாப் ஹீரோவான தளபதி விஜய் ரூ. 80 கோடி வருமான வரி செலுத்தி இரண்டாவது இடத்தில் உள்ளாராம். பாலிவுட் ஹீரோ சல்மான் கான் ரூ. 75 கோடி செலுத்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

டாப் 10 லிஸ்டில் இருப்பவர்கள்

மூத்த நடிகரான அமிதாப் பச்சன் ரூ. 71 கோடி வரி செலுத்தியுள்ளார். ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி வரியாக ரூ.66 கோடி செலுத்தி இருக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக ரூ. 42 கோடி வரி செலுத்திய அஜய் தேவ்கன் 6வது இடத்திலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ரூ.38 கோடி செலுத்தி ஏழாவது இடத்தில் இருக்கிறார்கள். முறையை 8 முதல் 10வது இடத்தில் ரன்பீர் கபூர் ரூ.36 கோடி, ஹிருத்திக் ரோஷன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் என இருவரும் ரூ. 28 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளனர்.

இந்த லிஸ்டில் டாப் 10 இடத்தில் இடம்பிடித்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகராக தளபதி விஜய் உள்ளார். தி கோட் ரிலீஸ் நாளில், முறையாக அவர் வருமான வரி செலுத்தியிருப்பது குறித்து தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் விஜய் மீது மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

டாப் 20 லிஸ்டில் இருக்கும் பிரபலங்கள்

பாலிவுட் பிரபலமான கபில் ஷர்மா ரூ. 26 கோடி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி ரூ. 23 கோடி, பாலிவுட் நடிகை கரீன் கபூர் ரூ. 20 கோடி, ஷாகித் கபூர் ரூ. 14 கோடி, தென்னிந்திய நடிகர்களான மோகன் லால், அல்லு அர்ஜுன் ஆகியோரு முறையே ரூ. 14 கோடி கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியா ரூ. 13 கோடி, நடிகை கியாரா அத்வானி ரூ. 12 கோடி, பங்கஜ் திரிபாதி மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் ரூ. 11 கோடி என பிரபலங்கள் பலரும் கோடிகள் வரியை செலுத்தியுள்ளனர்.

பாலிவுடன் சினிமாவின் கான் நடிகர்களில் ஒருவரான அமீர்கான் ரூ. 10 கோடி வரி செலுத்தியுள்ளார்.

ஷாருக், விஜய், சல்மான் புதிய படங்கள்

ஷாருக் நடிப்பில் கடைசியாக வெளியான டங்கி, ஜவான், பதான் என மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தின. ஷாருக் தற்போது சுஜய் கோஷ் இயக்கத்தில் கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கின் மகள் சுஹானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தளபதி விஜய் தனது அரசியல் கட்சி குறித்து இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படம் தொடர்பாக நேர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

சல்மான் கான் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு ரமலான் வெளியீடாக படம் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.