MORNING QUOTES : மழைக்கால சிறுநீரக பாதுகாப்பு! நீங்கள் தினமுமே செய்யவேண்டிய 10 விஷயங்கள் இவைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : மழைக்கால சிறுநீரக பாதுகாப்பு! நீங்கள் தினமுமே செய்யவேண்டிய 10 விஷயங்கள் இவைதான்!

MORNING QUOTES : மழைக்கால சிறுநீரக பாதுகாப்பு! நீங்கள் தினமுமே செய்யவேண்டிய 10 விஷயங்கள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Aug 24, 2024 05:38 AM IST

Morning Quotes : மழைக்கால சிறுநீரக பாதுகாப்புக்கு நீங்கள் தினமுமே செய்யவேண்டிய 10 விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்றுங்கள்.

Morning Quotes : மழைக்கால சிறுநீரக பாதுகாப்பு! நீங்கள் தினமுமே செய்யவேண்டிய 10 விஷயங்கள் இவைதான்!
Morning Quotes : மழைக்கால சிறுநீரக பாதுகாப்பு! நீங்கள் தினமுமே செய்யவேண்டிய 10 விஷயங்கள் இவைதான்!

ஆரோக்கிய உணவு

ஆரோக்கியமான உணவுதான் அனைத்துக்கும் அடித்தளம். நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவு உங்கள் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பேணுகிறது. இது உங்களின் நாள்பட்ட சிறுநீரக ஆரோக்கியத்துக்கு சிறந்தது. எனவே மழைக்காலத்தில் ஆரோக்கிய உணவை உறுதிசெய்யுங்கள். மழைக்காலத்தில் நீங்கள் சளி ஏற்படும் என்று தண்ணீர் நிறைந்த பழங்களை தவிர்ப்பீர்கள். ஆனால் அதுபோல் செய்யாமல் பழங்கள் எடுப்பதை வழக்கமாக்குங்கள்.

உப்பு

சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அதிக உப்புதான் காரணமாகிறது. எனவே அதிக உப்பை குறைக்கவேண்டும். தேவையில்லாமல் நீங்கள் எடுக்கும் அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது உங்கள் சிறுநீரகத்துக்கு தேவையில்லாத அழுத்தத்தைத் தருகிறது.

நீர்ச்சத்து

உங்கள் சிறுநீரகம் நன்றாக இயங்குவதற்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் தண்ணீர் உதவுகிறது. எனவே உங்கள் சிறுநீரக இயக்கத்துக்கு, நீங்கள் போதிய அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக கோடை காலத்தை விட குளிர்காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும். அடிக்கடி கோடை வெப்பத்தின் அளவுக்கு தாகம் ஏற்படாது. நீங்கள் அதிக தண்ணீர் எடுப்பது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உங்கள் உடலில் சேரும் கழிவுகளையும் நீக்கி, சிறுநீரக இயக்கத்துக்கு உதவுகிறது.

ரத்தச் சர்க்கரை அளவு

உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் உயர் ரத்த சர்க்கரை உங்கள் சிறுநீரகத்தை அதிக குளுக்கோஸை வடிகட்ட வற்புறுத்துகிறது. இதனால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. எனவே சிறுநீரக ஆரோக்கியம் சிறக்க ரத்தச் சர்க்கரை அளவை நீங்கள் கட்டுக்குள் வைக்கவேண்டும்.

மதுவை குறைக்க வேண்டும்

நீங்கள் பருகும் பெரும்பாலான அளவு மதுவை உங்கள் கல்லீரல் உடைக்கிறது. அது உங்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த செயலின்போது உருவாகும், சில பொருட்கள் ஆல்கஹாலைவிட உங்கள் உடலுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பானங்கள்

நீங்கள் எடுத்துக்கொள்ளும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை குறைக்கவேண்டும். ஏனெனில் அதில் சோடியம், பாஸ்பலஸ் மற்றும் சர்க்கரை இருக்கும். அது உங்கள் உடலுக்கு தேவையில்லாத ஆரோக்கிய கோளாறுகளை ஏற்படுத்தும்.

தரமான உறக்கத்துக்கு முக்கியத்துவம்

உங்கள் உடல் நீங்கள் உறங்கும்போதுதான், ஓய்வு நிலைக்கு செல்கிறது. உங்கள் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உங்களுக்கு போதிய அளவு நேரம் தரமான உறக்கம் தேவைப்படுகிறது.

ரத்த அழுத்த கண்காணிப்பு

உங்கள் உடலில் உயர் ரத்த அழுத்தம் இருந்து, அதை நீங்கள் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், அது உங்கள் ரத்த நாளங்களை சேதப்படுத்தும். அது உங்கள் சிறுநீரக ரத்த நாளங்களை அதிகளவு பாதிக்கும். எனவே உங்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளதென்றால், அதை கட்டுக்குள் வைத்துவிடுங்கள்.

மருந்துகள்

உங்களுக்கு தேவையற்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது அல்லது நீங்களாகவே மருந்துகள் எடுத்துக்கொள்வது தவறு. எனவே உங்களுக்கு கொடுக்கப்படாத வலி நிவாரணிகள் மற்றும் குறிப்பிட்ட சில மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். சில மருந்துகள் உங்களின் சிறுநீரகத்தை சேதப்படுத்தும். எனவே மருத்துவ பரிந்துரை இல்லாத மருந்துகள் எடுப்பதை தவிர்க்கவேண்டும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.