Tamil Top 10 News: போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன் முதல் சீரியல் கொலை குற்றவாளி கைது வரை- டாப் 10 நியூஸ் இதோ..!-today evening top 10 news with tamil nadu national and world on august 10 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன் முதல் சீரியல் கொலை குற்றவாளி கைது வரை- டாப் 10 நியூஸ் இதோ..!

Tamil Top 10 News: போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன் முதல் சீரியல் கொலை குற்றவாளி கைது வரை- டாப் 10 நியூஸ் இதோ..!

Karthikeyan S HT Tamil
Aug 10, 2024 06:57 PM IST

Tamil Top 10 News: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன், ஆமைகள் பறிமுதல், சீரியல் கொலை குற்றவாளி கைது உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Tamil Top 10 News: போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன் முதல் சீரியல் கொலை குற்றவாளி கைது வரை- டாப் 10 நியூஸ் இதோ..!
Tamil Top 10 News: போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன் முதல் சீரியல் கொலை குற்றவாளி கைது வரை- டாப் 10 நியூஸ் இதோ..!

ரூ.38 கோடி ஒதுக்கீடு!

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2022 டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் இதன்மூலம் பயனடைவர். கோவை போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.4.3 கோடி, கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.8 கோடி, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூச்சுத்திணறி பறிபோன உயிர்கள்

கொடைக்கானல் அருகே ‘பார்பிகியூ’ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சுத்திணறி 2 பேர் பலியாகினர். சின்னபள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் ஜெயகண்ணன், ஆனந்த் பாபு ஆகியோர் மது அருந்திக்கொண்டே சமைத்துள்ளனர். அப்போது அடுப்பை அணைக்காமல் தூங்க சென்றுள்ளனர். மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

"வயநாடு பேரிடர் சாதாரணமானது அல்ல"

நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான பேரின் கனவுகள் சிதைந்து விட்டன, பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கு நாம்தான் பொறுப்பு. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோதும் என் இதயம் கனத்துவிட்டது. மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. கேரளா தனித்து விடப்படவில்லை. ஒட்டுமொத்த தேசமும் கேரள மக்களோடு இருக்கிறது. வயநாடு பேரிடர் சாதாரணமானது அல்ல; கேரளாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆமைகள் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட 2,600 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் வழங்கப்பட்ட வெண்கல பதக்கம் தரமாக இல்லை என குற்றச்சாட்டு

அமெரிக்க ஸ்கேட்டிங் வீரர் நைஜா ஹஸ்டன், ஜூலை 29 அன்று வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். வெண்கலப் பதக்கம் அதன் நிறத்தை ஒரே வாரத்தில் இழக்கத் தொடங்கியதாக ஹஸ்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஜனநாயகத்தில் நியாயமான குரல்களுக்கு எப்போதும் இடம் உண்டு. அதை நசுக்க தமிழக அரசும், காவல்துறையும் முயலக் கூடாது. அனுமதியின்றி பேரணியும், போராட்டமும் நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்க் மனைவி, குழந்தை, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு

மக்கள் போராட்டத்திற்கு தமிழக அரசு செவிசாய்த்துள்ளது; அரசும் காவல்துறையும் பயந்துவிட்டது; நாம் அவர்களை பயப்பட வைத்துள்ளோம் என்று ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிகேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார்.

205 தாக்குதல் சம்பவங்கள்

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டில் கடந்த சில நாட்களில் 205 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டின் சிறுபான்மை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதுதான் சமூக நீதியா? - சீமான் கேள்வி

கரோனோ பெருந்தொற்று பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

உ.பி.,யை உலுக்கிய சீரியல் கொலை - குற்றவாளி கைது!

உத்தரப்பிரதேசத்தில் துப்பட்டா மற்றும் புடவையால் கழுத்தை இறுக்கி, கடந்த 14 மாதங்களில் 9 பெண்களை கொலை செய்த பரெய்லி பகுதியை சேர்ந்த குல்தீப் (35) என்பவரை காவல்துறை கைது செய்தது. குல்தீப்க்கு 2014ல் திருமணமாகியுள்ளது. இவரின் மோசமான நடவடிக்கை பிடிக்காமல் அவரின் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் பெண்கள் மீது கோபம் கொண்ட குல்தீப், பெண்களை கொலை செய்துவிட்டு அவர்களின், லிப்ஸ்டிக், பொட்டு போன்ற உடைமைகளில் ஒன்றை எடுத்து வைத்துக்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.