தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rk Suresh: ’நான் தலைமறைவாக இருந்தேனா?’ போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்த Rk சுரேஷ் பரபரப்பு பேட்டி!

RK Suresh: ’நான் தலைமறைவாக இருந்தேனா?’ போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்த RK சுரேஷ் பரபரப்பு பேட்டி!

Kathiravan V HT Tamil
Dec 12, 2023 11:55 AM IST

”Arudra Money Fraud: இந்தியா திரும்பிய ஆர்.கே.சுரேஷ், சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் விசாரணைக்காக ஆஜர் ஆக வந்தார்”

நடிகர் ஆர்.கே.சுரேஷ்
நடிகர் ஆர்.கே.சுரேஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆருத்ரா பண மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த நடிகரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று இந்தியா திரும்பினார். ஆர்.கே.சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்ததாக தெரிவித்ததால் ஆர்.கே.சுரேஷ் விடுவிக்கப்பட்டார்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி 2438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே.சுரேஷ் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே ஆர்.கே.சுரேஷ் தலைமறைவான நிலையில், அவர் உள்ளிட்ட 4 பேர் மீது கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

வெளிநாட்டில் உள்ளதால் தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது கடந்த செம்டம்பர் மாதம் உயர்நீதிமன்றத்தை ஆர்.கே.சுரேஷ் தனது வழக்கறிஞர் மூலம் நாடி இருந்தார். இதனிடையே ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கை முடக்கி பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியா திரும்பிய ஆர்.கே.சுரேஷ், சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் விசாரணைக்காக ஆஜர் ஆக வந்தார். அப்போது அவரிடம், தலைமறைவானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த ஆர்.கே.சுரேஷ், ’தலைமறைவா? நா ஏங்க தலைமறைவாக போறேன். எல்லாமே இங்க இருக்கும்போது நா ஏன் தலைமறைவாக போறேன்; போயிட்டு வந்து பேசுறன்’ என கூறி விசாரணைக்கு சென்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்