Fact Check: ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் CM ஸ்டாலின் வெற்றி பெற்றாரா?
ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Claim: ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி
Fact: வைரலாகும் தகவல் தவறானதாகும். மு.க.ஸ்டாலின் அதிக வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“சென்ற சட்டமன்றத் தேர்தல் -பெரும் அரசியல் தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஆம்ஸ்ட்ராங் இடம் வெறும் 3000 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வென்றார். 2026 லும் இதே நிலைமை இருக்குமா? இப்போது புரிகிறதா? படுகொலை பின்னணி?” என்று இந்த தகவல் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
Fact Check/Verification
ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் நியூஸ் செக்கர் தமிழ் செய்திக் குழு ஈடுபட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் கொளத்தூரில் போட்டியிட்டுள்ளாரா என்று தேடியபோது அவர் அத்தேர்தலில் எங்கும் போட்டியிடவில்லை என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக உறுதியாகியது. கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜமால் முகமது மீரா என்பவர் போட்டியிட்டிருந்தார்.
போட்டியிட்டது இந்த தேர்தலில்..
தொடர்ந்து, அவர் கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தேர்தல்கள் குறித்து ஆராய்ந்தபோது கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் அங்கு போட்டியிட்டிருப்பது நமக்குத் தெரிய வந்தது.
ஆனால், அத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் 68,677 வாக்குகளுடன் வெற்றியும், அவருக்கு அடுத்த இடத்தில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி 65943 வாக்குகளும் பெற்றிருந்தனர் என்பதும், அத்தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் 4002 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார் என்பதும் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக நமக்கு உறுதியானது.
எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த பிஎஸ்பி தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாகப் பரவும் தகவல் போலியானது என்பது உறுதியாகிறது.
ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் தகவல் தவறானது என்பது நியூஸ் செக்கர் தமிழுக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு
இந்தச் செய்தி முதலில் நியூஸ் செக்கர் தமிழில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்பு உடைய திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஒரே குரலில் பேசுவதாக விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டி உள்ளார்.
டாபிக்ஸ்