தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ramadoss Tweet : வெடி விபத்தே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும் -ராமதாஸ்!

Ramadoss Tweet : வெடி விபத்தே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும் -ராமதாஸ்!

Divya Sekar HT Tamil
Jun 02, 2023 11:57 AM IST

இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சேலம் மாவட்டம், சேலம் வட்டம், எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த நடேசன் (50), சதீஷ்குமார் (35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம், எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த வசந்தா (45), மோகனா (38), மணிமேகலா (36), மகேஸ்வரி (32), பிரபாகரன் (31) மற்றும் பிருந்தா (28) ஆகிய ஆறு பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள நாட்டு வெடி கிடங்கில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த நால்வர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த ஐவருக்கும் தரமான மருத்துவம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் விரைவில் நலமடைந்து வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் தான் பட்டாசு விபத்துகள் ஏற்படும் என்ற நிலை மாறி, எல்லா மாவட்டங்களிலும் இப்போது வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் பட்டாசு மற்றும் வெடி ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதது தான். இந்தக் குறைகளை சரி செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்