Rain Alert: ’மக்களே உஷார்!’ 29 மாவட்டங்களில் இன்று மழை எச்சரிக்கை!-rain warning in 29 districts of tamil nadu and puducherry today - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Alert: ’மக்களே உஷார்!’ 29 மாவட்டங்களில் இன்று மழை எச்சரிக்கை!

Rain Alert: ’மக்களே உஷார்!’ 29 மாவட்டங்களில் இன்று மழை எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Jan 08, 2024 08:05 AM IST

”Rain warning: இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது”

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருவதால் நேற்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை மிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்றும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை கனமழை தொடரும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.