தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Railway Track Death Increases Last Year Compare To 2020, Rpf Report

RPF: அதிகரிக்கும் ரயில்வே தண்டவாள மரணங்கள்…வெளியான அதிர்ச்சி தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 23, 2023 01:07 PM IST

Railway Track Accident: கடந்த ஆண்டில் விபத்து மற்றும் தற்கொலையால் 2,066 பேர் ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசின் ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே இருப்புபாதையை கடப்பதால் நிகழும் விபத்துகள் அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு இருப்புபாதை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
ரயில்வே இருப்புபாதையை கடப்பதால் நிகழும் விபத்துகள் அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு இருப்புபாதை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி, கடந்த் 2022ஆம் ஆண்டில் விபத்து மற்றும் தற்கொலை காரணமாக 2,066 பேர் தண்டவாளத்தில் உயிரிழந்துள்ளனர். இது 2021ஆம் ஆண்டில் நிகழ்ந்த இறப்புகளை விட 25 சதவீதம் அதிகமாகும். 2021\ஆம் ஆண்டில் 1,535 பேர் ரயில்வே தண்டவாளங்களில் உயிரிழந்துள்ளனர்.

ரயில்வே இருப்பு பாதை விதிகளை மீறி அதில் கடக்கும்போது, விபத்து காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையானது 35 சதவீதம் அதிகரித்துள்ளது. விபத்தால் 2021 ஆண்டில் 1,313 பேரும், கடந்த ஆண்டில் 1,856 பேரும் உயரிழந்துள்ளனர்.

அதேபோல் ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களில் எண்ணிக்கயானது கடந்த ஆண்டில் 210 பேரும், 2021ஆம் ஆண்டில் 222 பேரும் என உள்ளது.

ரயில்வே தண்வாளத்தில் உயிரிழந்தவர்களில் 488 பேர் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே காவல்துறையினர் ரயில்களில் போதை கடத்தியவதாக கடந்த ஆண்டில் 168 பேரை கைது செய்திருப்பதுடன், அவர்களிடமிருந்து 2, 216 கிலோ போதை பொருள்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

ரயில் பயணங்களிலும், ரயில்வே இருப்பு பாதை அருகிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் 1512 என்ற உதவி எண்ணுக்கு அழைக்கலாம். அத்துடன் 9962 500500 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு ரயில்வே இருப்புபாதை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்