தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Viral: இளைஞரின் வயிற்றுக்குள் 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள்..ஷாக்கான மருத்துவர்கள்!

Viral: இளைஞரின் வயிற்றுக்குள் 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள்..ஷாக்கான மருத்துவர்கள்!

Karthikeyan S HT Tamil
Aug 19, 2023 12:43 PM IST

ஹேர் பின்கள், ஊக்குகள் போன்ற பொருட்கள் இளைஞரின் வயிற்றுக்குள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞர் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிளேடுகள், ஹேர் பின்கள் மற்றும் ஊக்குகள்.
இளைஞர் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிளேடுகள், ஹேர் பின்கள் மற்றும் ஊக்குகள்.

ட்ரெண்டிங் செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி முறை மூலமாக பிளேடு, ஹேர் பின்களை அகற்றி புதுச்சேரி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் ஒருவர் கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் ஹேர் பின்கள், ஊக்குகள் மற்றும் பிளேடுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவற்றை அகற்றும் நடவடிக்கையில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். அதுவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் அவற்றை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, எண்டோஸ்கோபி முறைப்படி காயமின்றி அவற்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் அந்த இளைஞரின் வயிற்றில் இருந்து மொத்தம் 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள், 8 பிளேடுகளை அகற்றி புதுச்சேரி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். எண்டோஸ்கோபி முறைப்படி நடந்த சிகிச்சைக்கு பிறகு அடுத்த ஆறு மணி நேரத்தில் வழக்கமான உணவை உட்கொண்ட இளைஞர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்