தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Balveer Singh Case: முன்னாள் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது பாய்ந்தது வன்கொடுமை தடுப்பு சட்டம்

Balveer Singh Case: முன்னாள் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது பாய்ந்தது வன்கொடுமை தடுப்பு சட்டம்

Manigandan K T HT Tamil
May 03, 2023 11:49 AM IST

CBCID: விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்வீர் சிங்
பல்வீர் சிங்

ட்ரெண்டிங் செய்திகள்

வரும் 5ம் தேதி நெல்லையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் காவல் உதவி கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். இவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக 4 வார்ங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறை டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வேத நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும் பல்வீர் சிங்குக்கு எதிராக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே சுபாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக, இந்தப் புகார் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பல்வீர் சிங் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

மூத்த ஐபிஎஸ் அதிகாரி அமுதா விசாரணை நடத்தி அளித்த அறிக்கையின்படி, இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜகவின் ஓபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதை உண்மை என நம்பி அந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்து 9,255 பேர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்