தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Political Leaders Condole The Demise Of Actor Mayilsamy

என் மீது அதிக பாசம் கொண்டவர் - மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Divya Sekar HT Tamil
Feb 19, 2023 12:08 PM IST

Actor Mayilsamy : நடிகர் மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மயில்சாமி மறைவு
மயில்சாமி மறைவு

ட்ரெண்டிங் செய்திகள்

மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிதோசனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி தமிழ் திரையுலகினரையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும்,ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்து பதிவிட்ட பதிவுகள் இதோ..

விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்,”நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியவர் மயில்சாமி; சிறந்த மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டும் கூட, நடிகராக மட்டுமின்றி நெருங்கிய குடும்ப நண்பராகவும் திகழ்ந்தவர்; என் மீது அதிக பாசம் கொண்டவர்; பழகுவதற்கு இனிமையானவர், அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்; அவரது இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாது இழப்பு”என குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும், பலகுரல் கலைஞரும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகரும், அவரது புகழை அனைத்து மேடைகளிலும் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தவருமான அன்புச் சகோதரர் திரு ஆர்.மயில்சாமி அவர்கள் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். 

மக்களின் மனங்களில் நீங்க இடம் பிடித்த இவருடைய இழப்பு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”என குறிப்பிட்டுள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “நகைச்சுவை நடிகர், வறியோர்க்கு உதவும் மனிதநேய மாண்பாளர், அன்புச்சகோதரர் மயில்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன். 

தனது தனித்துவமிக்க நகைச்சுவை நடிப்பால், கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த சகோதரர் மயில்சாமி அவர்களின் இழப்புபென்பது தமிழ்க்கலையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அன்புச்சகோதரர் மயில்சாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் “நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி ”என்று குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “பிரபல நடிகர் மயில்சாமி அவர்கள் திடீரென உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பலகுரல் கலைஞராக திகழ்ந்ததோடு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தவர். 

அரசியல் ஆர்வமிக்கவராக இருந்த மயில்சாமி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். நலிந்த திரைக்கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் மனதில் இடம் பெற்றவர். இந்தத் துயரமான தருணத்தில் மயில்சாமியின் குடும்பத்தினருக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்”எனத் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,” கோவையை சேர்ந்தவர் என எப்பொழுதும் பெருமையாகச் சொல்லிக்கொள்பவரும் எப்போது சந்தித்தாலும் அளவற்ற பிரியத்தோடு உரையாடுபவருமான அன்பு சகோதரர் மயில்சாமி அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

 அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”எனத் தெரிவித்தார்.

தொல்.திருமாவளவன்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் “நடிகர் மயில்சாமி அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. மேலும் பல பத்தாண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர். 

பிறரை மகிழ்வித்து மகிழும் தனது கலைத்திறன் மூலம் மக்களின் பேரன்பைப் பெற்றவர். அவரது மறைவு கலைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், கலைத்துறையினருக்கு ஆழ்ந்த இரங்கல்”எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்