தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை பவனி விழா கோலாகலம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை பவனி விழா கோலாகலம்

Priyadarshini R HT Tamil
Apr 02, 2023 08:41 AM IST

Palm Procession : உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது குருத்தோலை பவனி விழா கோலாகலமாக நடைபெற்றது. கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்க பங்கேற்றனர். ஓசோனா பாடல் பாடியபடி அவர்கள் பவனி வந்தனர்.

வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு விழா கோலாகலம்
வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு விழா கோலாகலம்

ஈஸ்டர்திருநாளுக்குமுன்கிறிஸ்தவர்கள்கடைப்பிடிக்கும்தவக்காலம்பிப்ரவரிமாதம் 22ம்தேதிசாம்பல்புதன்திருநாளுடன்தொடங்கியது.இந்ததவக்காலத்தின்கடைசிஞாயிற்றுக்கிழமைகுருத்தோலை ஞாயிறுதிருநாளாககடைப்பிடிக்கப்படுகிறது.இதனால் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும்இன்று குருத்தோலை ஞாயிறுதிருநாள் பவனி நடைபெற்றது.

வேளாங்கண்ணியில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம் உலகப்புகழ்பெற்றது. இங்கு குறுத்தோலை ஞாயிறு இன்று காலை குறுத்தோலை பவனியுடன் துவங்கியது. குறுத்தோலைகளை கையில் ஏந்திய நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள், பிஷப்களை பின்தொடர்ந்து ஓசோனா பாடல்களை பாடிக்கொண்டு சென்றார்கள்.

வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம்
வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம்

ஜெருசலேம்நகரில் 2000ஆண்டுகளுக்குமுன்புஇயேசுகிறிஸ்துவைகோவேறுகழுதையில்ஏற்றிசிறுவர்சிறுமியர்உள்படஅனைத்துபெரியோர்களும்சேர்ந்துஒலிவமரக்கிளைகளைக்கையில்ஏந்திதாவிதுமகனுக்குஓசன்னாஆண்டவர்பேரால்வருபவர்ஆசிபெற்றவர்எனஆர்ப்பரித்துக்கூறிபவனிவந்தனர்.

அந்தநிகழ்வைநினைவுகூறும்வகையில்இந்தகுறுத்தோலை பவனி நடைபெறுகிறது. இந்தகுருத்தோலைஞாயிறுதிருப்பலியின்மூலம்புனிதவாரம்கொண்டாட்டங்கள்தொடங்குகின்றன.

அதனைத்தொடர்ந்துஇந்தபுனிதவாரத்தில்வரும்ஏப்ரல்ஆறாம்தேதிஅன்றுவியாழக்கிழமைபுனிதவியாழனாககடைப்பிடிக்கப்படுகிறது.அன்றையதிருப்பலிநிறைவுபெறும்போதுதிவ்யநற்கருணை பவனியாக எடுத்துச்செல்லப்பட்டுஆலயத்தில்புதிதாகஅமைக்கப்பட்டிருக்கும்இடத்தில்வைக்கப்படும்.மறுநாள்புனிதவெள்ளிதிருநாளன்றுமுழுநாளும்நற்கருணைஆராதனைநடைபெறும்.

தொடர்ந்துதிருச்சிலுவைசுத்தம்செய்யப்பட்டுபுனிதநிகழ்ச்சியானஆலயத்தின்இறுதிசிலுவைபாதைநடைபெறும்.சனிக்கிழமையானஏப்ரல்எட்டாம்தேதிஅன்றுஇரவு 11மணிக்குதிருவிழிப்புவழிபாடுநடைபெறும்.

அன்றையதினம்விசுவாசிகள்மன்றாட்டு,நற்கருணைவழிபாடுஅனைத்தும்நடைபெறும்.இதனைத்தொடர்ந்துஉயிர்ப்புபெருவிழாநள்ளிரவுசிறப்புதிருப்பலிநடைபெறும்.அதன்பின்னர்ஏப்ரல்ஒன்பதாம்தேதியானஞாயிற்றுக்கிழமைஈஸ்டர்பெருவிழாகொண்டாடப்படும்.

புனிதவெள்ளிதிருநாளன்றுஉலகமக்களுக்காகப்பாவங்களைச்சுமந்துஉயிர்விட்டஇயேசு கிறிஸ்து மூன்றாம்நாள்உயிர்த்தெழும்திருநாளேஈஸ்டர்பெருநாளாகக்கொண்டாடப்படும்.

வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் குறுத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன. ஈஸ்டர் திருநாள் சிறப்பு வழிபாடுகள் பிப்ரவரி 17ம் தேதி முதல் துவங்கின. இன்று சிறப்பாக குறுத்தோலை பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பேராலயத்தின் முகப்பில் துவங்கிய பவனி, பேராலயத்தை சுற்றியுள்ள வீதிகள் வழியாகச்சென்று கலையரங்கில் நிறைவடைந்தது.

WhatsApp channel

டாபிக்ஸ்