தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palladam Case : பல்லடம் கொலை வழக்கு.. அடைக்கலம் கொடுத்த நபரும் சிக்கினார்!

Palladam Case : பல்லடம் கொலை வழக்கு.. அடைக்கலம் கொடுத்த நபரும் சிக்கினார்!

Divya Sekar HT Tamil
Sep 17, 2023 01:00 PM IST

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பல்லடம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் கொலை வழக்கு
பல்லடம் கொலை வழக்கு

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த ஐய்யப்பன் மகன் வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னச்சாமி என்பவர் மகன் செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்தாலபுரம் பகுதியை சேர்ந்த வனராஜ் மகன் விஷால் என்கிற சோனை முத்தையா(20) ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேசனின் கூட்டாளி திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்துவை திருப்பூர் மாவட்ட போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், இந்த கொலையில் தொடர்புடைய வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையாவை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் 2 பேரும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து பலத்த பாதுகாப்புடன் விசாரணை நடத்தி வந்தனர்.

அதே சமயம் மற்றொரு முக்கிய குற்றவாளியான வெங்கடேஷின் தந்தை ஐயப்பனையும் போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் 4 பேருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக வெங்கடேஷின் சகோதரர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விக்னேஷை பிடிக்க சென்றபோது தப்பி முயன்று நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டதால் அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்