தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kanchipuram: காஞ்சி மாநகராட்சியில் பேக்கேஜ் முறை டெண்டர் - ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பால் ரத்து

Kanchipuram: காஞ்சி மாநகராட்சியில் பேக்கேஜ் முறை டெண்டர் - ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பால் ரத்து

Kathiravan V HT Tamil
Aug 06, 2023 11:27 AM IST

”பேக்கேஜ் முறை டெண்டரை முதல் நிலை ஒப்பந்ததாரரில் ஒருவர் மட்டுமே செய்ய முடியும் என்பது விதி”

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம்
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம்

ட்ரெண்டிங் செய்திகள்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 15ஆவது மானிய நிதியில் இருந்து 2.74 கோடி ரூபாயில் 24 புதிய சாலைகளை அமைப்பதற்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று ‘பேக்கேஜ்’ முறையில் ’டெண்டர்’ விடவும், அதே போல் ஆறாவது மானிய நிதியில் இருந்து 1.70 கோடி ரூபாய் மதிப்பில், 31 சாலை பணிகள் நடப்பதற்கு டெண்டர் விடவும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு ‘பேக்கேஜ்’ முறையில் டெண்டர் விடுவதால் 24 சாலை பணிகளையும் ஒருவரே டெண்டர் எடுத்து, பின்னர் வேலை நடைபெறும். அதே போல் மற்றோரு வேலையான 31 பணிகளையும் ஒரே நபரே டெண்டர் எடுப்பார்.

இவ்வேலையை முதல் நிலை ஒப்பந்ததார் மட்டுமே செய்ய முடியும். மற்ற நான்காம் நிலை மற்றும் ஐந்தாம் நிலையில் இருக்கும் ஒப்பந்ததாரர்களால் இந்த டெண்டரில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதனால் ஒருவருக்கு மட்டும் அனைத்து வேலைகளையும் மொத்தமாக கொடுக்காமல் மற்ற சிறு ஒப்பந்ததாரர்களும் பயன்பெறும் வகையில், தனித்தனி டெண்டர்கள் விட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில், மாநகராட்சி ஆணையரிடம் கடந்த 2ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் ‘பேக்கேஜ்’ டெண்டர் முறையை ரத்து செய்து மாநகராட்சி அறிவிப்பு பலகையில் ஒட்டி உள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்