Armstrong Murder: ’ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை!’ பகுஜன் சமாஜ் புதிய தலைவர் ஆனந்தன் பரபரப்பு பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Armstrong Murder: ’ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை!’ பகுஜன் சமாஜ் புதிய தலைவர் ஆனந்தன் பரபரப்பு பேட்டி!

Armstrong Murder: ’ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை!’ பகுஜன் சமாஜ் புதிய தலைவர் ஆனந்தன் பரபரப்பு பேட்டி!

Kathiravan V HT Tamil
Jul 22, 2024 07:27 PM IST

Armstrong Murder Case: இதற்கு மூளையாக ஒருவர் செயல்பட்டு உள்ளார். ஆற்காடு சுரேஷ் என்பவரின் கொலைக்கு எதிராக இந்த கொலை நடந்ததாக காவல்துறை கமிஷனர் பேட்டி கொடுத்தார். ஆற்காடு சுரேஷ் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தவர். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் உடன் அவருக்கு விரோதம் கிடையாது.

Armstrong Murder: ’ஆம்ஸ்ட்ராங்  கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை!’ பகுஜன் சமாஜ் புதிய தலைவர் ஆனந்தன் பரபரப்பு பேட்டி!
Armstrong Murder: ’ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை!’ பகுஜன் சமாஜ் புதிய தலைவர் ஆனந்தன் பரபரப்பு பேட்டி!

வெகுஜன் மக்கள் இயக்கமாக எடுத்து செல்வோம்

ஆம்ஸ்ட்ராங் அண்ணன் நடத்தும் நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் பேர் வரை வருவார்கள். ஆனால் வாக்குகளை வெவ்வேறு கட்சிகளுக்கு செலுத்துவார்கள். பகுஜன் சமாஜ் கட்சி கொள்கை என்பது அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து வெகுஜன இயக்கமாக எடுத்து செல்வோம். 

இது ஒரு ’தலித் இயக்கம்’ என்று மீடியாக்கள் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இது அனைத்து மக்களுக்கான கட்சி. அண்ணன் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து எடுத்து செல்வோம். 

பொறாமையால் கொலை செய்து உள்ளனர் 

நான் 25 ஆண்டுகளாக வழக்கறிஞராக உள்ளேன். காவல்துறை விசாரணையை தொடங்கி உள்ளனர். ஒரு கொலை வழக்கு நடந்தால், அப்பகுதியில் உள்ள முக்கிய வழக்கறிஞர்களிடம் பேசி குற்றவாளிகளை ஒப்படைக்க சொல்வார்கள். இப்படி கேட்பது கொலை செய்பவர்களை ஊக்குவிப்பதாக அமையும். 

முன்பு ஒரு கொலை நடந்தால், வீட்டை சுற்றி விசாரணை நடக்கும். ஆனால் பழைய காவல்துறையின் செயல்பாடுகள் இப்போது குறைவாக உள்ளது. இந்த வழக்கில், ஆரம்ப கட்டத்தில் போலீஸ் உள்ளது. அனைவருக்குமான இருந்த தலைவரை மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து, அவரது புகழ் பிடிக்காமல், பொறாமையால் இந்த கொலையை செய்து உள்ளனர். 

ஆற்காடு சுரேஷுக்கு தொடர்பு இல்லை 

இதற்கு மூளையாக ஒருவர் செயல்பட்டு உள்ளார். ஆற்காடு சுரேஷ் என்பவரின் கொலைக்கு எதிராக இந்த கொலை நடந்ததாக காவல்துறை கமிஷனர் பேட்டி கொடுத்தார். ஆற்காடு சுரேஷ் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தவர். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் உடன் அவருக்கு விரோதம் கிடையாது. ஆனால் மீடியாக்கள் தவறாக சித்தரிக்கிறது. 

ஆம்ஸ்ட்ராங்க்கை கொன்றதாக சொல்லப்படும் ஜெயபால் என்பவர், 9 மாதமாக அண்ணனை சந்தித்தும் இல்லை, தொலைபேசியில் பேசியதும் இல்லை. ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

அதிமுக அரசு பொய் வழக்கு போட்டது

நக்கீரன் பிரகாஷ் என்பவர் சிறுவயதில் இருந்து ஆம்ஸ்ட்ராங்  உடன் பழகியதாக தவறான செய்திகளை கூறுகின்றார். உண்மை தகவல்களை தெரியாமல் சொல்கிறார். ரவுடி பின்புலம் என்று சொன்னால், அவருடைய கொலை நியாமானது ஆகிவிடும் என சித்தரிக்க முயற்சிக்கின்றனர். 

பிரபல எம்.எல்.ஏவின் நண்பராக ஆம்ஸ்ட்ராங் இருந்த காரணத்தால் அதிமுக அரசு அவர் மீது 6 வழக்குகளை போட்டனர். நீதிமன்றம் வழக்கு போட்ட அதிகாரிகள் மீதே வழக்கு போட சொல்லி உத்தரவிட்டு உள்ளனது.  ஆம்ஸ்ட்ராங் அவர்கள் குற்றமற்றவர் என்று சான்று வழக்கி அவருக்கு துப்பாக்கி லைசன்ஸை காவல் துறை தந்து உள்ளது. 

பார்கவுன்சில் சதி

பார் கவுன்சில் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில், அண்ணன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கி உள்ளார்கள். அண்ணன் ஆதரிக்கும் நபர்களுக்கு அவர்கள் வாக்களிப்பதால் அவர் வெற்றி பெறுகின்றார். இதனால் பார்கவுன்சில் தேர்தலில் தோற்றவர்களின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. 

புத்தர், அம்பேத்கரின் கொள்கையே அண்ணன் ஆம்ஸ்ராங்கின் கொள்கை, யாரையும் பழிக்கு, பழிவாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இதில் தொடர்பு உடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தூக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் ஆகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.