MHC: மதுரை, நெல்லையில் பார் கவுன்சில் தேர்வு மையங்கள் கோரிய வழக்கு: ஐகோர்ட் ஆணை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc: மதுரை, நெல்லையில் பார் கவுன்சில் தேர்வு மையங்கள் கோரிய வழக்கு: ஐகோர்ட் ஆணை

MHC: மதுரை, நெல்லையில் பார் கவுன்சில் தேர்வு மையங்கள் கோரிய வழக்கு: ஐகோர்ட் ஆணை

Karthikeyan S HT Tamil
Mar 13, 2023 06:08 PM IST

மதுரை, நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை.
உயர் நீதிமன்ற மதுரை கிளை.

மதுரை அதலை பகுதியைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "அகில இந்திய பார் கவுன்சில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய 3 தேர்வு மையங்கள் மட்டுமே உள்ளது. மதுரை, நெல்லை ஆகிய 2 பகுதிகளில் தேர்வு மையம் இல்லை.

சென்னை உயர் நீதிமன்றம் கிளை மதுரையில் உள்ளது. ஆனால், அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையம் இல்லை. இதனால், தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் படிப்பை முடித்தவுடன் கோவை, திருச்சி உள்ளிட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தங்கியிருந்து தேர்வு எழுதுவது கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்கள் பயன்பெறும் வகையில் மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளையும் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்களாக அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து இந்திய பார் கவுன்சில் செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு வி சாரணையை ஏப்ரல் 10 ஆம் தேதி ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.