தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  New App To Know Live Location In The Govt Buses

அரசு பஸ் பயணத்திலும் ‘லைவ் லொக்கேசன்’ வசதி – மொபைல் ஆப் மூலம் அறியலாம்

Priyadarshini R HT Tamil
Mar 10, 2023 11:33 AM IST

Live Location : அரசு பஸ் பயணத்திலும் இனி லைவ் லொகேஷனை தெரிந்துகொள்ளலாம். அதற்கு மொபைல் ஆப் வசதியும், பேருந்துகள் குறித்த அனைத்து விவரங்களும் தெரிந்துகொள்ள அரசு பஸ்களுக்கு இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில், சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் நேரம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் குறித்த தகவல்கள், அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை விவரங்கள், இயக்குநர்கள் குழு, போக்குவரத்து கழகங்களின் அமைப்பு, அவற்றின் பயணிகள் சார்ந்த சேவைகள், இயக்க வரம்பு, GST எண்கள், புகைப்படத் தொகுப்பு மற்றும் தொடர்பு எண்கள் ஆகிய விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்

பயணிகள் தங்கள் குறைகள், புகார்கள் பயணம் தொடர்பாக தகவல்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் வசதி இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து வருகை மற்றும் இயக்க நேரம் குறித்த விவரங்கள், வழித்தட தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள உரிய வசதி செய்யப்பட்டுள்ளது. 

"சென்னை பேருந்து செயலியை" பதிவிறக்கம் செய்வதன் மூலம் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து வருகை, பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடம் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருகை நேரம் குறித்த விவரங்கள் பயணிகள் அறிந்துகொள்ள உரிய வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இணைப்பு வசதி மூலம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உடனடி தளவழிப் பதிவு திட்டத்தின் (OTRS) வழியாக முன்பதிவு செய்வதற்கும். திருவிழாக்கால சிறப்பு பேருந்து இயக்கம் குறித்த தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இணைப்பு வசதி மூலம் தமிழ்நாடு அரசு, சாலைப் போக்குவரத்து நிறுவனம் (IRT) தமிழ்நாடு அரசு போக்குவரத்து மேம்பாட்டு நிதிக் கழகம் (TDFC), சென்னை மெட்ரோ ரயில் கழகம் (CMRL) போன்றவற்றின் இணையதளத்தைப் பார்க்கவும் உரிய வசதி செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும்போது அதன் வழித்தட விவரங்கள். புறப்படும் மற்றும் சேருமிடம், அட்டவணை, கட்டண விவரம் குறித்த தகவல்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளத்தில் உரிய தேடும் வசதிகள் உருவாக்கப்படும்.

இந்த இணையதளத்தை பொதுமக்கள் தேவையான தகவல்களை தேடவும் உரிய வசதிகளுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தினை URL (www.arasubus.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் பொதுமக்கள் பார்த்து பயன் அடையலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்