Top 10 News: ’தமிழ்நாட்டில் இன்று மழை! மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு!’ இன்றைய டாப் 10 செய்திகள்!
Morning Top 10 News: நாடாளுமன்றத் தேர்தல் முதல் உள்ளூர் செய்திகள் வரையிலான இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட டாப் 10 செய்திகள் இதோ
- இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள சக்தி வாய்ந்த பெரிய மனிதர்கள் என்னை ஆட்சியில் இருந்து நீக்க கைக்கோர்த்து உள்ளனர். காங்கிரஸால் ஊக்குவிக்கப்படும் எண்ணங்களும் சித்தாந்தங்களும் "ஆபத்தானவை" என்பதால் மக்கள் "காங்கிரஸிடமிருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
- விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தால் அது அவர்களை பாழாகிவிடும் என்று ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை மோடி தள்ளுபடி செய்யும் போது ஏன் அவ்வாறு கூறவில்லை. கோடீஸ்வரர்கள் கடன்கள் தள்ளுபடி செய்தால், விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு
- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஏன் பாரதிய ஜனதா கட்சியை தாக்குவது இல்லை. தங்கக் கடத்தல் உள்ளிட்ட பல ஊழல்களில் பினராயி விஜயனின் பெயர் வந்துள்ளது, ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு அவருக்கு எதிராக எந்த வழக்கையும் எடுக்கவில்லை அல்லது சோதனைகள் அல்லது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கேள்வி
- மணிப்பூரில் உள்ள 11 வாக்குப்பதிவு மையங்களில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. துப்பாக்கிச்சூடு, வாக்காளர் மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது. மொய்ராங்காம்பு சஜேப் மற்றும் தொங்கம் லைகாய், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள க்ஷேத்ரிகோவில் நான்கு மற்றும் தோங்ஜூவில் ஒன்று, உரிபோக்கில் மூன்று மற்றும் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கொந்தௌஜாமில் வாக்குச்சாவடிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
- வாக்குகளுக்கு பேரம் பேசுவது போன்ற வீடியோக்கள் வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதால் தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையருக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தல்.
- தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு, அனைத்து சாவடி மையங்களில் இருந்தும் முழு தரவுகள் வரவில்லை என தேர்தல் அதிகாரி விளக்கம்.
- கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணானலை குற்றம்சாட்டி இருந்த நிலையில், வாக்காளர் பெயர்கள் நீக்கும் நடைமுறைகளில் வெளிப்படை தன்மை உள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார்.
- ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ கூறி உள்ளார்.
- தேர்தல் பத்திர திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.
- கடலோர ஆந்திரா & யானம், ராயலசீமா, கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.