தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Modi: ‘தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் சிதறும்! ராகுல் காந்தி வயநாட்டில் இருந்து ஓடுவார்!’ பிரதமர் மோடி ஆவேசம்!

Modi: ‘தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் சிதறும்! ராகுல் காந்தி வயநாட்டில் இருந்து ஓடுவார்!’ பிரதமர் மோடி ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Apr 20, 2024 04:28 PM IST

”கடந்த பத்து வருடங்களில் நீங்கள் கண்டது வெறும் ட்ரெய்லர்தான், காங்கிரஸ் தோண்டிய பள்ளங்களை நிரப்புவதற்கு பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உண்மையான வளர்ச்சி ஏற்படும்”

நாந்தேட்டில் தேர்தல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி
நாந்தேட்டில் தேர்தல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி

ட்ரெண்டிங் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாந்தேட்டில் நடந்த பேரணியில் பேசிய அவர், “எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. தலைவர்கள் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டது போல் பிரச்சாரம் செய்யவில்லை. தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் இந்த தலைவர்களை நீங்கள் நம்புவீர்களா என்று நான் உங்களிடம் கேட்கிறேன். நாடு இவர்களை எப்படி நம்புவது? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

“நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு சில தலைவர்கள் ராஜ்யசபாவின் பின்வாசல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்ற அவர், ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எதிர்க்கட்சிகளின் கூட்டணி சிதறும் என்றும், கூட்டாளிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவார்கள் என்றும் மோடி கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக தாக்கி பேசிய மோடி, அமேதியில் இருந்து ஓடி வந்தது போல், வயநாட்டிலிருந்தும் ஓட வேண்டும் என்று கூறினார். 

வாக்குச்சாவடி மட்டத்திலிருந்து எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, முதல் கட்ட தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது, வாக்காளர்கள், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் எங்கள் கூட்டணியின் வெற்றிக்காக வாக்களிக்கின்றனர். 

எவ்வாறாயினும், நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்த விரும்பும் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 

போரில் தோற்கிறோம் என்று தெரிந்தாலும், வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 

இந்தியாவில் வாக்களிக்கும் சதவீதம் உலக அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. அடுத்த 25 ஆண்டுகள் உலகில் இந்தியா செல்வாக்கு செலுத்தும் ஆண்டாக இருக்கும் என பிரதமர் பேசினார்.

காங்கிரஸ் எப்போதுமே ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு எதிரான முயற்சிகளில் ஈடுபடுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியபோது அவர்கள் எங்களை விமர்சித்தனர். மராத்வாடா மற்றும் விதர்பாவின் பின்தங்கிய நிலைக்கும், இங்குள்ள வறட்சி போன்ற சூழலுக்கும் காங்கிரஸ் தான் காரணம், என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். 

காங்கிரஸ் கொடுத்த ஒவ்வொரு காயத்தையும் குணப்படுத்த மோடி உத்தரவாதம் அளிக்கிறார். கடந்த பத்து வருடங்களில் நீங்கள் கண்டது வெறும் ட்ரெய்லர்தான், காங்கிரஸ் தோண்டிய பள்ளங்களை நிரப்புவதற்கு பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உண்மையான வளர்ச்சி ஏற்படும், என்றும் பிரதமர் கூறினார். 

ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதாக நான் உறுதியளித்தேன், அதைச் செய்தேன், முத்தலாக் நடைமுறையை ரத்து செய்தோம், இந்தியப் பொருளாதாரத்தை ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்தோம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டினோம். சனாதன கலாச்சாரத்தை குறிவைத்து, ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிப்பதை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் எங்கள் உணர்வுகளை புண்படுத்துகிறது. இந்த மனநிலையை மன்னிக்க முடியுமா? என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார். 

மோடியின் பேச்சுக்கு பதிலளித்த மகாராஷ்டிர காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த், "இந்த தேர்தலில் ஆட்சியை இழக்கிறோம் என்பதை உணர்ந்து மோடி வாக்காளர்களை தவறாக வழிநடத்துகிறார். அவர்கள் வெற்றி பெற்றிருந்தால், அவர் சொல்வது போல், அவர் நான்கு சுற்றுகளை நடத்தியிருக்க மாட்டார். மகாராஷ்டிராவில் நடந்த பேரணிகளில், கடந்த 10 ஆண்டுகளாக தனது செயல்திறனுக்காக எதுவும் காட்டவில்லை என்று அவர் கூறினார்.

WhatsApp channel