Kerala CM Pinarayi Vijayan: ‘குண்டுவெடிப்பு துரதிர்ஷ்டவசமானது’-கேரளா முதல்வர் பினராயி விஜயன்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala Cm Pinarayi Vijayan: ‘குண்டுவெடிப்பு துரதிர்ஷ்டவசமானது’-கேரளா முதல்வர் பினராயி விஜயன்

Kerala CM Pinarayi Vijayan: ‘குண்டுவெடிப்பு துரதிர்ஷ்டவசமானது’-கேரளா முதல்வர் பினராயி விஜயன்

Manigandan K T HT Tamil
Jan 08, 2024 11:03 AM IST

Kerala blast: ஞாயிற்றுக்கிழமை காலை குண்டுவெடிப்பு நடந்தபோது வழிபாட்டுக் கூட்டத்தில் 2,000 க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

கேரள முதல்வர் பினராயி விஜன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
கேரள முதல்வர் பினராயி விஜன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

இதனிடையே, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர், கொலை மற்றும் அழிக்கும் மனநிலைக்கு கேரளா பலியாவதைப் பார்ப்பது துயரமானது என்றார். "அனைத்து மதத் தலைவர்களும் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதில் ஒன்றுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன், வன்முறையை கைவிட வேண்டும்" என்று தரூர் ட்வீட் செய்துள்ளார்.

களமசேரியில் பிரார்த்தனைக் கூட்டத்திற்காக பக்தர்கள் கூடியிருந்தபோது குறைந்தது மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததால் பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர்.

நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள டிஜிபி மற்றும் பிற மூத்த போலீஸ் அதிகாரிகள் களமசேரியில் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று முதல்வர் விஜயன் கூறினார்.

தொழுகையின் நடுவே முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக வழிபாட்டு மையத்தில் இருந்தவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். "இதையடுத்து, நாங்கள் மேலும் இரண்டு குண்டுவெடிப்புகளைக் கேட்டோம்," என்று மையத்திற்குள் இருந்த ஒரு வயதான பெண் கூறினார். குண்டுவெடிப்புக்கான காரணம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொடர் குண்டுவெடிப்பு இருந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று களமசேரி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, அரசு மருத்துவப் பணியாளர்கள் பணிக்கு வருமாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டார். சம்பவம் நடந்தபோது மண்டபத்திற்குள் 2,000க்கும் மேற்பட்டோர் இருந்ததாக மற்றொரு நபர் தெரிவித்தார்.

அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கிய மூன்று நாள் வழிபாட்டுக்கூட்டத்தின் கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.

ஹமாஸ் தலைவர் கலீத் மஷால், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியதை அடுத்து, கேரளாவில் அரசியல் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் விஜயனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்தார். மேலும், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்குமாறு என்ஐஏ மற்றும் என்எஸ்ஜிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.