தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  More Than 50 Cpm Members Who Tried To Show Black Flag To The Governor Were Arrested!

ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 50க்கும் மேற்பட்ட சிபிஎம் கட்சியினர் கைது!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 12, 2023 02:05 PM IST

Coimbatore: ஜெர்மானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்ஸின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ரவி கூறியிருந்தார்.

கருப்பு கொடி காட்ட முயன்ற சிபிஎம் கட்சியினர்.
கருப்பு கொடி காட்ட முயன்ற சிபிஎம் கட்சியினர்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஜெர்மானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்ஸின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ரவி கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அரசில் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தமிழகத்தில் எந்த பகுதிக்கு வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்நிலையில் உதகையில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சென்னை திரும்புகிறார். இதற்காக அவர் இன்று கோவை வந்தார். அப்போது விமான நிலையம் அருகே சிட்ரா பகுதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டனர். கருப்பு கொடியுடன் வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்பொழுது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனால் காவல் துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். காவல்துறை

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி அக்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதனால் விமான நிலையம் செல்லும் சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. சிட்ரா பகுதியில் இருந்து விமான நிலையம் செல்லும் பாதை வரை ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்